Asianet News TamilAsianet News Tamil

காலி சேர்கள் காற்றாட... கர்ஜித்த எடப்பாடி! அதிமுகவே நிரந்தரமாக ஆளுமாம்...

edappadi participated mgr centenary function in sivagangai with empty chairs
edappadi participated mgr centenary function in sivagangai with empty chairs
Author
First Published Nov 18, 2017, 7:36 PM IST


சிவகங்கையில் இன்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் பேசினார். அப்போது, தமிழகத்தை அதிமுக., தான் நிரந்தரமாக ஆட்சி செய்யும் என அழுத்தமாகக் கூறினார். 

சிவகங்கை எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் எடப்பாடி பழனிசாமி பேசியபோது,  தமிழ்நாட்டை அதிமுகதான் நிரந்தரமாக ஆட்சி செய்யும். 
அதிமுக தொண்டர்களின் எண்ணப்படி ஆட்சியையும், கட்சியையும் வழிநடத்துவோம். 
சட்டம் ஒழுங்கு பாதுகாக்கப்பட்டு, தமிழகம் அமைதிப் பூங்காவாக இருந்து வருகிறது. 

சுகாதாரத் துறையில் இந்தியாவிலேயே தமிழகம் முதலிடத்தில் உள்ளது” என்று அரசின் செயல்பாடுகளை அடுக்கிக் கொண்டே போனார். 

அண்மைக் காலத்தில் சென்னை மற்றும் தமிழகத்தின் கடலோரப் பகுதிகளில் பெய்த கன மழையின் போது, தமிழக அரசு நிர்வாகம் தாமதமாக விழித்துக் கொண்டாலும், சிறப்பாகவும், உடனடியாகவும் செயல்பட்டு பாதிப்புகளைக் குறைத்தது என்று நல்ல பொதுவாக பெயர் எடுத்துள்ளது. இருப்பினும், அதிகாரிகளுடனான ஆளுநர் ஆலோசனை, சசிகலா தொடர்புடையவர்களின் வீடுகள் அலுவலகங்களில் வருமான வரி சோதனை, ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லத்தில் நடந்த சோதனை என அடுக்கடுக்காய் பல நிகழ்வுகள், மாநில அரசின் மீது கடும் விமர்சனங்களை எதிர்க்கட்சிகள், தினகரன் ஆதரவாளர்கள் என பலராலும் முன்வைக்கத் தூண்டியுள்ளது. 

இந்நிலையில், இன்று அந்த சோதனைகள் குறித்து வாய்திறந்து பேசினார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.  சசிகலா குடும்பம் செய்த தவறுகளே வருமானவரி சோதனைக்கு காரணம் என்று கூறிய அவர்,  அரசு திட்டங்களை தெரிந்து கொள்ளவே ஆளுநர் அதிகாரிகளை சந்தித்தார் என்றும் ஆளுநர் ஆய்வு செய்யவில்லை என்றும் கூறி இரு விஷயங்களிலும் மௌனம் கலைத்தார். 

இன்று மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார் எடப்பாடி பழனிசாமி. அப்போது செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதிலளித்தார்.  சசிகலா குடும்பம் செய்த தவறுகளே வருமான வரித்துறை சோதனைக்கு காரணம்; ஆளுநர் ஆய்வு நடத்துகிறார் எனக் கூறுவது தவறு, நடக்கும் நிகழ்வுகளை தெரிந்து கொள்கிறார்.  

வரி ஏய்ப்பவர்கள் மீது சோதனை நடத்துவது வழக்கம். ஜெயலலிதா அறையில் எந்த சோதனையும் நடைபெறவில்லை... என்று நேற்றைய போயஸ் கார்டன் இல்ல சோதனைகளுக்கு தன் தரப்பு விளக்கத்தை அளித்தார். 

மேலும்,  சில பேர் செய்த தவறால், கட்சிக்கு களங்கம் ஏற்பட்டுள்ளது.  சசிகலா குடும்பத்தினர் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் நடத்தப்படும் வருமானவரி சோதனைக்கும், மாநில அரசுக்கும் எந்த தொடர்பும் இல்லை. 

ஆர்.கே.நகர் தொகுதி வேட்பாளராக தன்னைத்தானே அறிவித்துக் கொண்டார் தினகரன் என்று சொன்னதுதான், இந்த செய்தியாளர் சந்திப்பின் ஹைலைட்! 

சிவகங்கையில் நடைபெற்ற எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசினார் எடப்பாடி. இதற்காக ஏற்பாடுகளை என்னவோ செய்திருந்தார்கள் தான். ஆனால், எதிர்பார்த்த கூட்டம் தேறவில்லை. சேர்கள் பல காலியாக இருந்தன. தினகரனும் தென் மாவட்ட சுற்றுப் பயணத்தில் இருக்கிறார் என்பது குறிபிடத்தக்கது.  

Follow Us:
Download App:
  • android
  • ios