Asianet News TamilAsianet News Tamil

ஆர்.கே.நகரில் 50,000 வாக்குகள் வித்தியாசத்தில் தினகரன் வெற்றி பெறுவார்! சொன்னது யார் தெரியுமா?

Dinakaran will win in RK Nagar with 50000 votes - Nanjil Sampath
Dinakaran will win in RK Nagar with 50,000 votes - Nanjil Sampath
Author
First Published Dec 17, 2017, 12:02 PM IST


ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடும் டிடிவி தினகரன், 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என்று அவரின் ஆதரவாளர் நாஞ்சில் சம்பத் கூறியுள்ளார்.

சென்னை, ஆர்.கே.நகருக்கு வரும் 21 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. அதிமுக, திமுக, நாம் தமிழர் கட்சி, டிடிவி தினகரன் ஆகிய கட்சிகள் போட்டியிடுகின்றன. தற்போது ஆர்.கே.நகரில் தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது. தேர்தல் நடப்பதற்கு இன்னும் சில நாட்களே உள்ள
நிலையில், சூறாவளி பிரச்சாரத்தில் வேட்பாளர்கள் ஈடுபட்டுள்ளனர். 

அதிமுக வேட்பாளரான மதுசூதனனுக்கு வாக்கு சேகரிப்பில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள், தொண்டர்கள் என வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இதேபோல், திமுக வேட்பாளர் மருதுகணேஷை
ஆதரித்து திமுக தலைவர்கள் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Dinakaran will win in RK Nagar with 50,000 votes - Nanjil Sampath

ஆர்.கே.நகர் தொகுதியில், திமுக, அதிமுக, டிடிவி தினகரன் இடையே பலத்த போட்டி நிலவி வருகிறது. இந்த போட்டியில் யார் வெற்றி பெறுவார் என்று, தமிழக மக்கள் மிகுந்த எதிர்பார்ப்போடு உள்ளனர். அதேபோல் போட்டியிடும் வேட்பாளர்கள் தீவிரமாக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த இடைத்தேர்தலில் யார் வெற்றி பெறுவார்? என்பது கணிக்க முடியாத ஒன்றாக உள்ளது. ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் குறித்து பல்வேறு கருத்துகணிப்புகள் வெளிவருகின்றன. அண்மையில் வெளியான கருத்து கணிப்பு ஒன்றில் டிடிவி தினகரன் வெற்றி பெறுவார் என்று வெளியானது.

இந்த நிலையில், டிடிவி தினகரன் 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என்று அவரின் ஆதரவாளர் நாஞ்சில் சம்பத் கூறியுள்ளார்.

தினகரன் ஆதரவாளரான நாஞ்சில் சம்பத், பிரபல தமிழ் வார இதழ் ஒன்று பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், ஆர்.கே.நகரில் டிடிவி தினகரனுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது என்றார். தினகரன் 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் ஆர்.கே.நகர் தேர்தலில் வெற்றி பெறுவார் என்றும் நாஞ்சில் சம்பத் கூறியுள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios