Asianet News TamilAsianet News Tamil

Lunar Eclipse 2024 : ஹோலி தினத்தில் வரும் சந்திர கிரகணம்.. இந்தியாவில் பார்க்க முடியுமா?

2024-ம் ஆண்டின் முதல் சந்திர கிரகணம் மார்ச் 25-ம் தேதி நிகழ உள்ளது. அன்றைய தினம் தான் ஹோலி பண்டிகையும் கொண்டாடப்படுகிறது. 

Lunar Eclipse 2024: Cities to witness celestial event on Holi Rya
Author
First Published Mar 22, 2024, 11:32 AM IST

சூரியன், சந்திரன் பூமி ஆகியவை ஒரே நேர்க்கோட்டில் வரும் போது கிரகணம் ஏற்படுகிறது. சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையே பூமி வரும் போது, சூரியனின் ஒளி சந்திரன் மீது நேரடியாக சென்றடையாமல் தடுக்கப்படும் போது சந்திர கிரகணம் ஏற்படுகிறது. அந்த வகையில் 2024-ம் ஆண்டின் முதல் சந்திர கிரகணம் மார்ச் 25-ம் தேதி நிகழ உள்ளது. அன்றைய தினம் தான் ஹோலி பண்டிகையும் கொண்டாடப்படுகிறது. 

இந்த சந்திர கிரகணம் மார்ச் 25-ம் தேதி காலை 10.23.16 மணிக்கு தொடங்கி மதியம் 3.02.27 மணிக்கு முடிவடைகிறது.  அன்றைய தினம் நண்பகல் 12.42.51 மணிக்கு சந்திர கிரகணத்தி உச்ச நிகழ்வு ஏற்படும். ழ்ழ்ழ்ழ்ழ்ழ்ழ்ழ்ழ் 
முழு சந்திர கிரகணம் போலல்லாமல், சந்திரன் நேரடியாக பூமியின் முக்கிய நிழலின் (உம்ப்ரா) வழியாகச் செல்கிறது, ஒரு பெனும்பிரல் கிரகணத்தில், அது பெனும்ப்ரா எனப்படும் பூமியின் வெளிப்புற நிழல் வழியாக செல்கிறது. எனவே இது பெனும்பிரல் சந்திர கிரகணம் ஆகும். இது தெளிவற்ற, மங்கலான கிரகணமாகவே இருக்கும்.

சந்திர கிரகணத்தை எந்தெந்த நகரங்களில் காணலாம்?

இந்த சந்திர கிரகணத்தை உலகின் பல்வேறு மூலைகளில் உள்ள மக்கள் பார்க்க முடியும். ஐரோப்பா, வடக்கு/கிழக்கு ஆசியா, ஆஸ்திரேலியா, ஆப்பிரிக்கா மற்றும் வட அமெரிக்கா உள்ளிட்ட பரந்த பகுதிகளை உள்ளடக்கிய பல நாடுகளில் இருந்து இந்த நிகழ்வை பார்க்கலாம்.

சுவா, ரெய்க்ஜாவிக், நியூயார்க், சான் ஜுவான், மெக்சிகோ சிட்டி, அனாடிர், ஹவானா, மான்டிவீடியோ, சாண்டியாகோ, டெகுசிகல்பா, லிமா, கிங்ஸ்டன், சான் சால்வடார், லா பாஸ், அசுன்சியன், கிரிட்டிமதி, ஆக்லாந்து, புவெனஸ் அயர்ஸ், குவாத்தமாலா சிட்டி, நாசாவ், கராகஸ், மனகுவா, சாண்டோ டொமிங்கோ, பொகோடா, ரியோ டி ஜெனிரோ, மாண்ட்ரீல், வாஷிங்டன் டிசி, டக்கார் மற்றும் சிட்னி ஆகிய நகரங்களி வசிக்கும் மக்கள் இந்த சந்திர கிரகணத்தை பார்க்க முடியும்.

இந்தியாவில் சந்திர கிரகணத்தை பார்க்க முடியுமா?

இந்த சந்திர கிரகணம் இந்திய நேரப்படி பகல் நேரத்தில் நிகழ்வாதால் இந்தியாவில் இந்த கிரகணத்தை பார்க்க முடியாது. எனினும் 2024-ம் ஆண்டின் 2-வது சந்திர கிரகணம் அக்டோபர் 29-ம் தேதி நிகழ உள்ளது. இந்த கிரகணத்தை இந்தியாவில் பார்க்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
 
 

Follow Us:
Download App:
  • android
  • ios