Asianet News TamilAsianet News Tamil

அதிரடி மன்னன் ஆண்ட்ரே ரசலுக்கு எச்சரிக்கை விடும் ராஜஸ்தான் வீரர்!!

பின்வரிசையில் இறங்கும் ரசல், எல்லா போட்டிகளையுமே வெற்றிகரமாக முடித்துவைக்கிறார். ஐபிஎல்லின் மிகச்சிறந்த ஃபினிஷராக திகழ்கிறார் ரசல். அணியில் தனது கடமையை உணர்ந்து செயல்படுகிறார் ஆண்ட்ரே ரசல். டெத் ஓவர்களில் காட்டடி அடித்து கேகேஆர் அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்திவிடுகிறார். 

rajasthan royals spinner gowtham warning andre russell
Author
India, First Published Apr 7, 2019, 3:04 PM IST

ஐபிஎல் 12வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. இந்த சீசனில் தினேஷ் கார்த்திக் தலைமையிலான கேகேஆர் அணி ஆதிக்கம் செலுத்துகிறது. 

இந்த சீசனில் இதுவரை ஆடிய 4 போட்டிகளில் 3ல் கேகேஆர் அணி வென்றுள்ளது. டெல்லி கேபிடள்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சூப்பர் ஓவரில் தோல்வியடைந்தது. கேகேஆர் அணியின் வெற்றிக்கு அந்த அணியின் ஆல்ரவுண்டர் ஆண்ட்ரே ரசல் தான் முக்கியமான காரணம். 

பின்வரிசையில் இறங்கும் ரசல், எல்லா போட்டிகளையுமே வெற்றிகரமாக முடித்துவைக்கிறார். ஐபிஎல்லின் மிகச்சிறந்த ஃபினிஷராக திகழ்கிறார் ரசல். அணியில் தனது கடமையை உணர்ந்து செயல்படுகிறார் ஆண்ட்ரே ரசல். டெத் ஓவர்களில் காட்டடி அடித்து கேகேஆர் அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்திவிடுகிறார். 

அந்த அணியின் வெற்றிக்கு ரசலின் பங்களிப்பு அளப்பரியது. ஆர்சிபி அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் கூட கடைசி 4 ஓவர்களில் கேகேஆர் அணிக்கு 66 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், மூன்றே ஓவர்களில் அந்த ரன்னை குவித்து அணியை வெற்றி பெற செய்துவிட்டார். 

rajasthan royals spinner gowtham warning andre russell

இந்த சீசனில் இதுவரை வெறும் 77 பந்துகளை மட்டுமே எதிர்கொண்டு 207 ரன்களை குவித்துள்ளார் ரசல். இந்நிலையில், இன்றைய போட்டியில் கேகேஆர் அணியும் ராஜஸ்தான் ராயல்ஸும் மோதுகின்றன. இந்த போட்டி ஜெய்ப்பூரில் இரவு 8 மணிக்கு நடக்கிறது. 

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இதுவரை ஆடிய 4 போட்டிகளில் ஒன்றில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. கேகேஆர் அணி இதுவரை ஆடிய 4 போட்டிகளில் ஒன்றில் மட்டுமே தோல்வியடைந்துள்ளது. வெற்றியை தொடரும் முனைப்பில் கேகேஆர் அணியும் இரண்டாவது வெற்றியை பதிவு செய்யும் முனைப்பில் ராஜஸ்தான் அணியும் இன்று மோதுகின்றன. 

இன்றைய போட்டியிலும் ஆண்ட்ரே ரசல் அதிரடியாக அடித்தால் வெற்றி கேகேஆர் அணிக்கே சாதகமாகிவிடும். இந்நிலையில், நல்ல ஃபார்மில் இருக்கும் ஆண்ட்ரே ரசலை வீழ்த்துவதற்கு பக்காவாக ராஜஸ்தான் அணி திட்டம் தீட்டி வைத்திருப்பதாக அந்த அணியின் ஸ்பின்னர் கிருஷ்ணப்பா கௌதம் தெரிவித்துள்ளார். 
 

Follow Us:
Download App:
  • android
  • ios