Asianet News TamilAsianet News Tamil

K Veeramani : அண்ணாமலை ஆயிரம் உளரல்களை கொட்டலாம், ஆனால் அவர் ஐபிஎஸ் ஆனது சுயமரியாதை கட்சியால் தான் - கி.வீரமணி

 நாடாளுமன்ற தேர்தலில் தமிழகம் மற்றும் புதுவை உட்பட 40 தொகுதிகளிலும் ஒரு பார்ப்பனர் கூட  நிறுத்தப்படாததே சுயமரியாதை என திராவிடர் கழக தலைவர் கி வீரமணி தெரிவித்துள்ளார்.
 

K Veeramani has said that the Annamalai IPS is because of the Self Respect Party KAK
Author
First Published Apr 26, 2024, 8:32 AM IST

மனித இனத்துக்கு அடையாளமே சுயமரியாதை

சென்னை வேப்பேரியில் உள்ள பெரியார் திடலில் சுயமரியாதை இயக்கத்தின் நூற்றாண்டு விழா மற்றும் குடி அரசு இதழின் நூற்றாண்டு விழாவின் தொடக்க நிகழ்ச்சி நடைப்பெற்றது. நிகழ்ச்சியில் பேசிய திராவிடர் கழக தலைவர் கீ வீரமணி, சுயமரியாதை இயக்கம் தொடங்கும் போது நான் பிறக்கவில்லை. ஆனால் சுயமரியாதை பிறந்தவர்களாக நம்மை நாம் ஆக்கி கொண்டுள்ளோம். பெரியாருடைய வாழ் நாள் மாணவன் நான் என்ற பெருமை எனக்குண்டு. மனித இனத்துக்கு அடையாளமே சுயமரியாதை தான். நாட்டில் 10 ஆண்டு கால கொடுமைக்கு முடிவு கட்டும் தேர்தலாக இந்த நாடாளும்ன்ற தேர்தல்  நடைப்பெற்று கொண்டிருக்கிறது. 

அண்ணாமலை உளறல்கள்

இந்த தேர்தலில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி உட்பட 40 தொகுதிகளில் பா ஜ க உட்பட எந்த கட்சியும் ஒரு பார்ப்பனரை  வேட்பாளராக கூட நிறுத்தவில்லை.  அது தான் சுயமரியாதை. அக்ரஹாரத்திலும் சுயமரியாதையின் தாக்கம் அதிகமாக உள்ளது. தமிழ்நாட்டில் எங்காவது மோட்ட பாப்பாத்தியை தேடி கண்டுபிடிக்க முடியுமா? கமல்ஹாசன் நடிப்பில் வெளிவந்த தசாவதாரம் படத்தில் மட்டுமே பார்க்க முடியும் என பேசினார். பா ஜ க மாநில தலைவர் அண்ணாமலை ஆயிரம் உளரல்களை கொட்டலாம் , ஆனால் அவர் ஐபிஎஸ் ஆனது சுயமரியாதை கட்சியால் தான் என கி.வீரமணி தெரிவித்தார்.

கையில வச்ச மையே அழியல; அதுக்குள்ள ஓட்ட காணும்னு போராட்டமா? கோவையில் வசமாக சிக்கிய பாஜகவினர்

Follow Us:
Download App:
  • android
  • ios