Asianet News TamilAsianet News Tamil

அது என்ன சூரிய திலகம்? அயோத்தி கோயிலில் நடக்கும் அரிய நிகழ்வின் பின்னணியில் உள்ள அறிவியல்..

ராம நவமியான இன்று ராமருக்கு ‘சூரிய அபிஷேகம்’ அல்லது ‘சூரிய திலகம்’ என்ற அரிய நிகழ்வு நடைபெறும். இன்று மதிய நேரத்தில் சூரியனின் ஒளி ராமரின் நெற்றியில் விழும்.

What is Surya Tilak of Ram lalla? Know science behind unique occurrence in Ayodhya's temple Rya
Author
First Published Apr 17, 2024, 10:40 AM IST

உத்தரப்பிரதேசம் மாநிலம் அயோத்தியில் புதிதாகக் கட்டப்பட்ட ராமர் கோயிலில்  ராம நவமி கொண்டாட்டம் களைகட்டி உள்ளது. ராமரின் பிறப்பை குறிக்கும் இந்த ராம நவமி முதன்முறையாக புதிய ராமர் கோயிலில் கொண்டாடப்பட உள்ளது. இந்த ஆண்டு, பால ராமரின் 'சூரிய அபிஷேகம்' நிகழ்வு மிகவும் சிறப்புவாய்ந்தது.

அதாவது இன்று ராமருக்கு ‘சூரிய அபிஷேகம்’ அல்லது ‘சூரிய திலகம்’ என்ற அரிய  நிகழ்வு நடைபெறும். இன்று மதிய நேரத்தில் சூரியனின் ஒளி ராமரின் நெற்றியில் விழும். அடுத்த நான்கு நிமிடங்களுக்கு 75 மில்லிமீட்டர்கள் வரை வட்ட வடிவில் திலகம் போல பால ராமரின் நெற்றியில் சூரிய ஒளி படும்..

பகவான் சூரியனின் வழித்தோன்றல்கள் அல்லது சூர்யவன்ஷிகள் என நம்பப்படும் இஷ்வாகு குலத்தைச் சேர்ந்தவர் என்பதால் இது மிகவும் முக்கியத்துவம் வாந்தது. இந்திய தொழில்நுட்பக் கழகம், ரூர்க்கி, (IIT-R) விஞ்ஞானிகள் சூரிய திலக பொறிமுறையை வடிவமைத்துள்ளனர்.

அயோத்தியில் ராம நவமி கொண்டாட்டங்கள்.. இன்று மதியம் ராமர் நெற்றியில் சூரிய ஒளி படும் அரிய நிகழ்வு..

சூரிய திலகம் அல்லது சூரிய அபிஷேகம் என்றா என்ன?

சூரியனின் கதிர்கள் தெய்வத்தின் நெற்றியில் விழும்படி செய்யப்படுகிறது, இது பக்தியின் அடையாளமாக உள்ளது. எவ்வாறாயினும், இந்தியாவில் சூரிய அபிஷேகம் என்பது புதிய விஷயம் இல்லை. நாட்டின் பழமையான கோயில்களில் ஏற்கனவே இந்த நடைமுறை உள்ளது. ராமர் கோவிலில் இதே பொறிமுறை பயன்படுத்தப்பட்டுள்ளது, ஆனால் பொறியியல் சற்று வித்தியாசமானது.

இன்று (ஏப்ரல் 16) மதியம் 12 மணிக்கு, சூரியனின் ஓளி, ராமர் கோயில் கருவறையில் உள்ள பால ராமர் நெற்றியின் மீது சுமார் இரண்டு முதல் இரண்டரை நிமிடங்கள் வரை ஒளிரும். ராமர் கோயிலை நிர்வகித்து வரும்  ஸ்ரீ ராம ஜென்மபூமி தீரத் க்ஷேத்ரா அறக்கட்டளை, திட்டத்தின் வெற்றியை உறுதி செய்யும் நோக்கில் செயல்பட்டு வருகிறது.

சூரிய திலகம் பொறிமுறையை ரூர்க்கியில் உள்ள ஐஐடி விஞ்ஞானிகள் வடிவமைத்தனர். பால ராமர் மீது சூரிய திலக விழாவை சுமூகமாக நடத்துவதற்கு இரண்டு சோதனைகள் ஏற்கனவே நடந்துள்ளன. அதன்படி ராம நவமியான இன்று ஐஐடி குழு உயர்தர கண்ணாடிகள் மற்றும் லென்ஸ்கள் கொண்ட ஒரு கருவியைப் பயன்படுத்தி, ராமரின் நெற்றியில் சூரிய ஒளியை குறிப்பிட்ட நேரத்தில் துல்லியமாக செலுத்துகிறது.

பிரதிபலிப்பு கண்ணாடிகள் மற்றும் லென்ஸ்கள் கொண்ட ஒரு பிரத்யேக கருவி தயாரிக்கப்பட்டுள்ளது. இது மூன்றாவது மாடியில் இருந்து சூரியக் கதிர்கள் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் கோயில் கருவறையில் பிரதிபலிக்க உதவும்.

இந்த திலக எந்திரம் பித்தளை மற்றும் வெண்கலப் பொருட்களால் செய்யப்பட்டது. சந்திர நாட்காட்டியின் அடிப்படையில், ஒவ்வொரு ஆண்டும் ராம நவமி நாளில் சூரியனை துல்லியமாக நிலைநிறுத்துவதற்கு இந்த இயந்திரம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

முன்னாள் இஸ்ரோ விஞ்ஞானி மணீஷ் புரோஹித் சூரிய அபிஷேகத்தின் பின்னணியில் உள்ள வழிமுறையை விளக்கினார் மற்றும் சூரியனின் கதிர்கள் ராமரின் நெற்றியில் ஒளிர்வதை உறுதி செய்யும் போது மூன்று விஷயங்கள் பரிசீலிக்கப்பட்டுள்ளன என்றார்.

தொடர்ந்து பேசிய அவர் “ தொல்லியல் வானியல் , மெட்டானிக் சுழற்சி மற்றும் அனலெமா ஆகியவை தான் அந்த விஷயங்கள். தொல்லியல் வானியல் என்பது வான நிலைகளைப் பயன்படுத்தி நினைவுச்சின்னங்களை வடிவமைக்கப் பயன்படுத்தப்படும் ஒரு நடைமுறை. மற்றொரு நிகழ்வு அனலெம்மா ஆகும், இது பூமியின் சாய்வு மற்றும் சுற்றுப்பாதையின் காரணமாக ஆண்டுதோறும் சூரியனின் மாறும் நிலையைக் கண்காணிக்கும் எண்-எட்டு வளைவு ஆகும்.

பெங்களூரு மக்களே உஷார்.. ஏப்ரல் 17 முதல் போக்குவரத்தில் அதிரடி மாற்றம்.. முழு விபரம் இதோ !!

கடைசியாக, மெட்டானிக் சுழற்சி என்பது சுமார் 19 ஆண்டுகள் ஆகும், இதன் போது சந்திரனின் கட்டங்கள் ஆண்டின் அதே நாட்களுடன் மறுசீரமைக்கப்படுகின்றன. ராம நவமி மற்றும் அது வரும் 'திதி' ஆகியவை ஒன்றாக வருவதை உறுதி செய்வதற்காக இந்த சுழற்சி ஆலோசிக்கப்பட்டது என்று மணீஷ் புரோஹித் கூறினார்.

சூரிய திலகத்தின் பண்டைய அறிவியல்

அயோத்தியில் ராமரின் நெற்றியில் சூரியனின் கதிர்களை வழிநடத்த லென்ஸ்கள் மற்றும் கண்ணாடிகளைப் பயன்படுத்துகிறது, பண்டைய இந்தியக் கோயில்கள் பாரம்பரியமாக வானியல் ரீதியாகக் கணக்கிடப்பட்ட திறப்புகளை கர்ப்பகிரஹத்தி மற்றும் அதைச் சுற்றி சூரிய ஒளியை குறிப்பிட்ட நாட்களில் தெய்வத்தை நேரடியாக ஒளிரச் செய்ய அனுமதிக்கின்றன. சூரிய திலகம் இந்தியா முழுவதும் உள்ள பல ஜெயின் கோவில்கள் மற்றும் இந்து சூரிய கோவில்களில் வழக்கமாக உள்ளது.

சூரியனார் கோவில் கோவில், தமிழ்நாடு: சூரிய அபிஷேகம் நடைபெறும் முக்கிய கோவில்களில் ஒன்று கும்போகோணம் சூரியனார் கோவில் கோவில். 11-12 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கோயில் கட்டிடக்கலை மற்றும் வானியல் அறிவின் தனித்துவமான கலவைக்காக அறியப்படுகிறது. இதே போல் கர்நாடகா, மகாராஷ்டிரா, ஆந்திரா, ஒடிஷா, குஜராத், ராஜஸ்தான், மத்திய பிரதேசம் உள்ளிட்ட பல மாநிலங்களில் உள்ள பழமையான கோயில்களில் இன்று சூரிய ஒளி கருவறையில் படும் படி வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த பழங்கால கோயில்களில் சூரியனின் ஒளி நேரடியாக கடவுளின் சிலை மீது படும் வகையில் கட்டப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us:
Download App:
  • android
  • ios