Asianet News TamilAsianet News Tamil

"மோடி கேர்" திட்டம்...! இதய சிகிச்சைக்கு ரூ.1.20 லட்சம்..! நுரையீரல் சிகிச்சைக்கு ரூ.45,000 மட்டுமே....!

treatment cost fixed under modi care
treatment cost fixed under modi care
Author
First Published May 25, 2018, 4:23 PM IST


"மோடி கேர்" திட்டம்...! இதய சிகிச்சைக்கு ரூ.1.20 லட்சம் நுரையீரல்  சிகிச்சைக்கு ரூ.45,000 மட்டுமே....!

மோடி கேர் என குறிபிடப்படும் தேசிய சுகாதார துறை பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 1354  மருத்துவ சிகிச்சைக்கான கட்டணத்தை மத்திய அரசு தெரிவித்து உள்ளது

கடந்த பிப்ரவரி 1 ஆம் தேதி பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து 10 கோடி ஏழை குடும்பங்கள் பயன்பெறும் வகையில் ஆயுஷ்மான் பாரத் திட்டம் கடந்த பிப்ரவரி 1 ஆம் தேதி பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது.

இந்த திட்டத்தின் கீழ், ஒவ்வொரு வருடமும் 5 லட்சம் வரை பயன்படுத்திக்கொள்ளலாம்

இந்த திட்டத்தின் மூலம்,

இதய சிகிச்சை, கண் சிகிச்சை, சிறுநீரக அறுவை சிகிச்சை, பச்சிளங் குழந்தைகளுக்கான சிகிச்சை என அனைத்து சிகிச்சையும் அளிக்கப்பட உள்ளதுtreatment cost fixed under modi care

கட்டண விவரம்

இதய வால்வு மாற்று அறுவை சிகிச்சை - ரூ. 1.20 லட்சம்

நுரையீரல் அறுவை சிகிச்சைக்கு  - ரூ. 45,000

இடுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கு - ரூ. 90,000

மூட்டு மாற்று அறுவை சிகிச்சை - ரூ. 80,000

கர்ப்பப்பை அகற்றுதல் - ரூ.20,000

குடல் இறக்குதல் -  ரூ.15,000

மகப்பேறு அறுவை சிகிச்சை - ரூ. 9,000

மோடி கேர் திட்டத்தின் கீழ் நிர்ணயிக்கப்பட்ட இந்த கட்டணம், அரசு  ஊழியர்கள், ஓய்வூதியக்காரர்கள் மற்றும் அவர்களை சார்ந்தவர்கள் மத்திய அரசின் சுகாதரா திட்டத்தின் கீழ் பெரும் கட்டணத்தை விட, இந்த  திட்டம் மூலம் 15 முதல் 20  சதவீதம் மிகவும் குறைவாக தான் இருக்கும்.

இந்த திட்ட அறிக்கை மாநிலங்களில் காப்பீடு செய்ய முன் வரும் நிறுவனங்களுக்கு அளிக்கப்பட உள்ளதாக கூறப்பட்டு உள்ளது

treatment cost fixed under modi care

ஆயுஷ்மான் பாரத் நிர்வாகி இந்து பூஷன் இது குறித்து கருத்து தெரிவிக்கும் போது....

மேலும், இந்த திட்டத்தின் கீழ் மருத்துவ ஆலோசனை கட்டணம், மருந்துகள், ரத்த பரிசோதனை, நோயாளிகளுக்னான உணவு, சிகிச்சை முடிந்த பின் ஏற்படும் கட்டணம் அனைத்தும் அடங்கும் என அவர் தெரிவித்து உள்ளார்.

இந்த தட்டம் அமலுக்கு வந்துள்ள தருவாயில், தனியார் காப்பீட்டு நிறுவனங்களும் கட்டணத்தை குறைக்கக்கூடிய சூழ்நிலை ஏற்படும் எனவும் அவர் தெரிவித்து உள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios