Asianet News TamilAsianet News Tamil

திரிணாமூல் காங்கிரஸ் முன்னாள் எம்.பி. மஹுவா மொய்த்ராவின் சர்ச்சை பேச்சு.. வைரல் வீடியோ..

முன்னாள் எம்.பி மஹுவா மொய்த்ரா பேசிய வீடியோ இணையத்தில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

Former Lok Sabha MP Mahua Moitra says sex is her secret of energy controversy video goes viral Rya
Author
First Published Apr 18, 2024, 1:52 PM IST

நாடாளுமன்றத்தில் தனது அனல் பறந்த பேச்சின் மூலம் பிரபலமானவர் திரிணாமூல் காங்கிரஸ் முன்னாள் எம்.பி மஹுவா மொய்த்ரா. ஆனால், நாடாளுமன்றத்தில்  கேள்வி கேட்க பணம் பெற்றதாக எழுந்த புகாரில், நெறிமுறைக் குழு அறிக்கையின் பரிந்துரை நாடாளுமன்ற மக்களவையில் ஏற்றுக்கொள்ளப்பட்டதையடுத்து, மஹுவா மொய்த்ரா தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதை தொடர்ந்து பாஜக தலைமையிலான மத்திய அரசை அவர் தொடர்ந்து விமர்சித்து வந்தார்.

லண்டனில் ரூ.10 கோடி மதிப்பில் ஆடம்பர வீடு.. இந்த பாஜக வேட்பாளரின் சொத்து மதிப்பு ரூ.1400 கோடி..

இந்த நிலையில் 2024 மக்களவை தேர்தலில் மஹுவா மொய்த்ரா மேற்கு வங்காளத்தில் உள்ள கிருஷ்ணாநகர் தொகுதியில் மீண்டும் போட்டியிடுகிறார். தற்போது அவர் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில் மஹுவா மொய்த்ரா பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் மஹுவாவிடம் “ உங்கள் எனர்ஜியின் ரகசியம் என்ற கேள்வி கேட்கப்படுகிறது. அதற்கு செக்ஸ் தான் எனது எனர்ஜி” என்று கூறுகிறார். மஹுவாவின் இந்த பதில் சர்ச்சையாகி உள்ளது. 

மஹுவா மொய்த்ரா கிருஷ்ணாநகர் மக்களவை தொகுதியின் முன்னாள் எம்.பி. அவர் 2019 இல் திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு 65,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அதற்கு முன்பு அவர், ல் கரீம்பூர் சட்டமன்ற உறுப்பினராக இருந்தார்.

மஹுவா மொய்த்ரா அஸ்ஸாமின் கச்சார் மாவட்டத்தில் பிறந்தார். அவர் அமெரிக்காவின் மாசசூசெட்ஸில் உள்ள மவுண்ட் ஹோலியோக் கல்லூரி சவுத் ஹாட்லியில் பொருளாதாரம் மற்றும் கணிதத்தில் பட்டம் பெற்றார். தனது படிப்பை முடித்த பின்னர், நியூயார்க் மற்றும் லண்டனில் அமெரிக்க நிறுவனமான ஜேபி மோர்கன் சேஸ் என்ற  நிறுவனத்தில் முதலீட்டு வங்கியாளராக மஹுவா பணியாற்றினார்.

2009-ம் ஆண்டு லண்டனில் ஜேபி மோர்கன் சேஸின் துணைத் தலைவர் பதவியில் இருந்து அவர் விலகினார். 2010-ம் ஆண்டில் அகில இந்திய திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். பின்னர் 2016 ஆம் ஆண்டு மேற்கு வங்காள சட்டமன்றத் தேர்தலில் நாடியா மாவட்டத்தின் கரீம்பூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றா. பின்னர் 2019 மக்களவை தேர்தலில் மேற்கு வங்க மாநிலம் கிருஷ்ணகரில் இருந்து வெற்றி பெற்றார். 

பாஜகவிற்கு ஒரு ஓட்டு போட்டால் 2 ஓட்டாக விழுகிறது.!! தேர்தல் ஆணையத்தை விசாரிக்க உத்தரவிட்ட உச்சநீதிமன்றம்

மத்திய பாஜக அரசை கடுமையாக விமர்சிப்பவர்களில் ஒருவராக மஹுவா மொய்த்ரா உள்ளார். கடுமையான விமர்சனங்களையும் கருத்துகளையும் கூறி வருகிறார். நீதிமன்றம் குறித்தும், காளி தேவி குறித்தும் அவர் பேசிய கருத்துகள் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us:
Download App:
  • android
  • ios