கூலி டீம் SRH டாப் ஆர்டர் மாதிரி இருக்கு! படத்தில் இருந்து நீக்கினாலும் பாசத்துடன் லோகேஷை வாழ்த்திய ரத்னகுமார்
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் கூலி படத்தின் டைட்டில் டீசர் வெளியாகி உள்ள நிலையில், அதற்கு வாழ்த்து தெரிவித்து இயக்குனர் ரத்னகுமார் பதிவிட்டுள்ளார்.
ரஜினிகாந்த்தின் கூலி
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் முதன்முறையாக நடிக்க உள்ளதால் அப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் இப்படத்தை தற்காலிகமாக தலைவர் 171 என அழைத்து வந்தனர். இந்த நிலையில், நேற்று மாலை தலைவர் 171 படத்தின் டைட்டில் டீசர் வெளியிடப்பட்டது. அதன்படி இப்படத்திற்கு கூலி என டைட்டில் வைக்கப்பட்டு உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
லோகேஷ் - ரத்னகுமார் கூட்டணி முறிவு
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடைசியாக வெளிவந்த மாஸ்டர், விக்ரம், லியோ ஆகிய மூன்று படங்களிலும் அவருக்கு பக்க பலமாக இருந்து ஸ்கிரிப்ட் பணிகளை மேற்கொண்டு வந்தார் ரத்ன குமார். இந்த கூட்டணி கூலி படத்திலும் தொடருமா என்கிற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் ரத்ன குமார் லோகேஷ் தயாரிப்பில் படம் இயக்க உள்ளதால் அவர் ரஜினி படத்தில் பணியாற்றமாட்டார் என அறிவிக்கப்பட்டது. மேலும் லோகேஷ் தயாரிப்பில் லாரன்ஸ் நடிக்கும் படத்தை ரத்னகுமார் இயக்க உள்ளதாக பேச்சு அடிபட்டது.
இதையும் படியுங்கள்... Goundamani Daughter : சத்தமே இல்லாமல் கவுண்டமணி மகள் செய்யும் பேருதவி.. நெகிழ வைக்கும் செயல்..
லோகேஷ் படத்தில் இருந்து ரத்னகுமார் நீக்கம்
லாரன்ஸ் நடிக்கும் படத்தை தயாரிப்பதோடு, அப்படத்தின் கதையும் லோகேஷ் உடையது தான் என்றும், ரத்னகுமார் அப்படத்திற்கு திரைக்கதை அமைத்து இயக்க உள்ளதாக கூறப்பட்டது. அண்மையில் லாரன்ஸ் நடிக்கும் படத்தின் அறிவிப்பை வெளியிட்டார் லோகேஷ். ஆனால் அதில் இயக்குனர் பெயரில் ரத்ன குமாருக்கு பதிலாக பாக்கியராஜ் கண்ணன் பெயர் இடம்பெற்றிருந்தது. இதனால் ரசிகர்கள் பேரதிர்ச்சி அடைந்தனர். பென்ஸ் படத்தில் இருந்து ரத்னகுமார் நீக்கப்பட்டதால் அவருக்கும் லோகேஷுக்கும் இடையே சண்டை ஏற்பட்டதாகவும் செய்திகள் உலா வந்தன.
லோகேஷை வாழ்த்திய ரத்னகுமார்
அந்த சர்ச்சைகளுக்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் இயக்குனர் ரத்னகுமார், லோகேஷின் அடுத்த படமான கூலி டைட்டில் டீசர் வெளியிட்டதற்கு வாழ்த்து தெரிவித்து தன்னுடைய எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், முடிச்சிடலாமா... கூலி சூப்பர்ஸ்டார் படத்திற்கு என்ன ஒரு அருமையான டைட்டில். தங்கத்தை ஹைலைட்டாக காட்ட பிளாக் டோனை பயன்படுத்தி இருப்பது தொடங்கி இசை தேர்ந்தெடுத்துள்ளது வரை எல்லாமே அருமை. இந்தப்படம் 4 இலக்க பாக்ஸ் ஆபிஸ் நம்பரை எட்ட வாழ்த்துக்கள் லோகேஷ்.
ரஜினிகாந்த், அனிருத், கிரீஷ் கங்காதரன், அன்பறிவு, பிலோமின், சன் பிக்சர்ஸ் என இந்த டீமை பார்க்கும் போது சன்ரைசர்ஸ் அணியின் டாப் ஆர்டரை பார்ப்பது போல உள்ளது. ‘முயற்சி தன் மெய் வருத்தத் கூலி தரும்’. கூலி பட டீம் அனைவருக்கும் வாழ்த்துக்கள் என ரத்னகுமார் பதிவிட்டுள்ளார்.
இதையும் படியுங்கள்... Kajal : குழந்தை பெற்ற பிறகும் குறையாத கவர்ச்சி... கார்ஜியஸ் காஜல் அகர்வாலின் கிக்கான கிளாமர் கிளிக்ஸ் இதோ