KPY Bala : முன்னணி மாஸ் நடிகரின் உதவியால் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாகிறார் KPY பாலா... குவியும் வாழ்த்துக்கள்
சின்னத்திரை காமெடி நிகழ்ச்சிகளில் கலக்கி வந்த பாலா விரைவில் சினிமாவில் ஹீரோவாக களமிறங்க உள்ளதால் அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளது.
kpy bala
விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்டு, தன்னுடைய டைமிங் காமெடிகளால் ரசிகர்களை வயிறுகுலுங்க சிரிக்க வைத்து பேமஸ் ஆனவர் பாலா. அந்நிகழ்ச்சியில் இறுதிப்போட்டி வரை முன்னேறி நூலிழையில் வெற்றி வாய்ப்பை அவர் நழுவவிட்டாலும், அடுத்தடுத்து விஜய் டிவி ஷோக்களில் கிடைத்த வாய்ப்புகளை பயன்படுத்தி சின்னத்திரையில் மளமளவென உயர்ந்தார்.
Vijay TV bala
குறிப்பாக குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் புகழ் உடன் சேர்ந்து இவர் செய்த அலப்பறைகள் அந்நிகழ்ச்சியை சூப்பர் ஹிட் ஆக்கியதோடு, பாலாவை அடுத்தடுத்த உயரங்களுக்கு கொண்டு சென்றது. பின்னர் சினிமா வாய்ப்புகள் வரத் தொடங்கியதால் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து விலகிய பாலா, அவ்வப்போது முன்னணி நடிகர்களின் படத்திற்கான இசை வெளியீட்டு விழா மற்றும் விருது விழாக்களை தொகுத்து வழங்கி தொகுப்பாளராகவும் ஜொலித்து வருகிறார்.
இதையும் படியுங்கள்... Nayanthara Photos : குறையாத காதலுடன்... குழந்தைகளோடு ஜம்முனு தமிழ் புத்தாண்டை கொண்டாடிய விக்கி - நயன் ஜோடி
Raghava Lawrence, Bala
இதுதவிர இவர் செய்யும் சமூக உதவிகள் பலரையும் வியப்பில் ஆழ்த்தி உள்ளது. தான் சம்பாதிக்கும் மொத்த பணத்தையும் ஏழைகள் மற்றும் கஷ்டப்படுபவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து கொடுத்து வருகிறார் பாலா. அண்மையில் இவருடன் ராகவா லாரன்ஸும் கைகோர்த்து, இருவரும் சேர்ந்து உதவிக்கரம் நீட்டி வருகின்றனர். இது தொடர்பான வீடியோக்களும் சமூக வலைதளங்களில் வெளியாகி செம்ம வைரலாகி வருகின்றன.
Raghava Lawrence Introduce KPY Bala as hero
இந்த நிலையில், தற்போது ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார் பாலா. அதன்படி, அண்மையில் ஜீ தமிழில் நடைபெற்ற டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியின் பைனலில் லாரன்ஸ், பாலா இருவரும் கலந்துகொண்டனர். அப்போது லாரன்ஸ், பாலாவை தான் ஹீரோவாக்க உள்ளதாகவும், இயக்குனர்கள் கதை இருந்தால் தன்னிடம் எடுத்து வருமாறும் கூறி இருந்தார். அவரின் இந்த அறிவிப்பால் உற்சாகத்தில் திளைத்துப்போன பாலா, லாரன்ஸை நேரில் சந்தித்து அவரின் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கி இருக்கிறார். அந்த வீடியோவில் பாலாவை கட்டியணைத்து ஹீரோ சார் என லாரன்ஸ் அறிமுகப்படுத்தும் காட்சிகளும் இடம்பெற்று உள்ளன. பாலா ஹீரோவாக உள்ளதை அறிந்த ரசிகர்களும் பிரபலங்களும் அவருக்கு வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்.
இதையும் படியுங்கள்... Kanguva : டூயல் கெட்டப்பில் சூர்யா.. தமிழ் புத்தாண்டில் வெறித்தனமான அப்டேட் வெளியிட்ட கங்குவா படக்குழு!