மோலிவுட் ஹீரோ பிரித்விராஜ்.. அவரோட அம்மா மல்லிகாவை பற்றி தெரியுமா? தமிழ் படத்திலும் நடிச்சிருக்காங்க!
Prithviraj Sukumaran Mother : மலையாள மொழி படங்கள் மட்டுமல்லாமல் பல தமிழ் திரைப்படங்களிலும் நடித்து புகழ்பெற்ற நடிகர் பிரித்விராஜ் சுகுமாரன். அவருடைய தந்தையை போலவே, அவருடைய தாயும் ஒரு பிரபல மலையாள நடிகை தான்.
Mallika
மல்லிகா சுகுமார், கடந்த 1954 ஆம் ஆண்டு கொச்சியில் பிறந்த இவர் கேரளாவில் தனது பள்ளி படிப்பையும் பட்டப் படிப்பையும் முடித்தார். அதன் பிறகு திரைப்படங்களில் நடிக்க துவங்கிய இவர் தனது இருபதாவது வயது முதல் கலையுலகில் பயணித்து வருகின்றார். இவர் திரைத்துறைக்கு வந்த அதே 1974ம் ஆண்டு, மலையாள திரை உலகில் பிரபல நடிகராக திகழ்ந்து வந்த ஜெகதி ஸ்ரீகுமார் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
jagathy sreekumar
இது தன் குடும்பத்தினருடைய எதிர்ப்பை மீறி அவரே செய்து கொண்ட ஒரு திருமணமாகும். ஆனால் திருமணத்திற்கு பிறகு அவர்களுக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 1976 ஆம் ஆண்டு ஜெகதி ஸ்ரீகுமார் அவர்களிடமிருந்து சட்டபூர்வமாக விவாகரத்து பெற்றார் மல்லிகா. அதன் பிறகு தான் கடந்த 1978 ஆம் ஆண்டு அப்பொழுது மலையாள திரை உலகில் கொடி கட்டி பறந்த பிரபல நடிகர் சுகுமாரன் அவர்களை திருமணம் செய்து கொண்டார்.
Actor sukumaran
இந்த தம்பதியர்களுக்கு பிறந்த இரண்டு குழந்தைகள் தான் இந்திரஜித் மற்றும் பிருதிவிராஜ் சுகுமாரன் ஆகிய இருவரும். இந்திரஜித் சுகுமாரனும் மலையாளம் மற்றும் தமிழ் மொழியில் பல திரைப்படங்களில் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 1997 ஆம் ஆண்டு சுகுமாரன் மறைவுக்கு பிறகு தனது இரண்டு மகன்களோடு வசித்து வரும் நடிகை மல்லிகா சுகுமாரன் தொடர்ச்சியாக பல படங்களில் நடித்து வருகிறார்.
Valthukkal Movie
கடந்த 2008 ஆம் ஆண்டு தமிழில் இயக்குனர் சீமான் எழுதி இயக்கிய மாதவனின் "வாழ்த்துக்கள்" என்கின்ற திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரம் ஏற்று நடித்திருந்தார் மல்லிகா சுகுமாரன். அதுதான் அவர் முதலும் கடைசியுமாக நடித்த தமிழ் படம் என்றே கூறலாம். கடந்த 2022 ஆம் ஆண்டு பிரபல இயக்குனர் அல்போன்ஸ் புத்தரன் இயக்கத்தில் தனது மகன் பிரித்திவிராஜ் சுகுமாரன் நடித்த "Gold" என்கின்ற திரைப்படத்தில் அவருடைய அன்னையாகவே இவர் நடித்திருந்தார்.
Gold movie
அதேபோல தன்னுடைய மூத்த மகன் இந்திரஜித் சுகுமாரன் நடிக்கும் படங்களிலும் இவர் நடித்து வருகிறார். தற்பொழுது 69 வயதாகும் மல்லிகா சுகுமாரன் இறுதியாக கடந்த 2023 ஆம் ஆண்டு வெளியான குயின் எலிசபெத் என்ற திரைப்படத்தில் தோன்றினார். திரைத்துறையில் மட்டும் அல்லாமல் கடந்த 2001 ஆம் ஆண்டு முதல் 25க்கும் மேற்பட்ட நாடகங்களிலும் நடித்து புகழ்பெற்ற ஒரு மாபெரும் நடிகை தான் பிரபல நடிகர் பிரிதிவிராஜ் சுகுமாரனின் அன்னை மல்லிகா சுகுமாரன்.
2024-ல் இந்தியாவின் அதிக லாபம் ஈட்டிய படம்.. அதுவும் 1000% லாபம்.. ஆனா ஹனுமான், ஷைத்தான் இல்ல..