பிக்பாஸில் இருந்து வெளியேறியதும் பிரபல ஆண் போட்டியாளருடன் அவுட்டிங் சென்ற ஜோவிகா - வைரலாகும் போட்டோஸ்
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து எலிமினேட் ஆன பின்னர் வனிதாவின் மகள் ஜோவிகா, பிரபல ஆண் போட்டியாளருடன் அவுட்டிங் சென்ற புகைப்படம் வெளியாகி வைரலாகி வருகிறது.
Jovika
பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மிகவும் பிரபலமான போட்டியாளர் என்றால் அது வனிதா தான். கடந்த 2019-ம் ஆண்டு நடைபெற்ற அந்நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் கலந்துகொண்டதன் மூலம் பட்டிதொட்டியெங்கும் பேமஸ் ஆனார் வனிதா. இதையடுத்து தற்போது நடைபெற்று வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசனில் வனிதாவின் மகள் ஜோவிகா போட்டியாளராக களமிறங்கி அனைவருக்கும் இன்ப அதிர்ச்சி கொடுத்தார். அதுவும் முதல் வாரத்திலேயே விசித்ரா உடன் அவர் சண்டையிட்டது வேறலெவலில் டிரெண்ட் ஆனது.
vanitha daughter jovika
அந்த சண்டைக்கு பின்னர் அப்படியே சைலண்ட் மோடுக்கு சென்ற ஜோவிகா, மாயாவின் புல்லி கேங்கில் சேர்ந்ததால் அப்படியே ரூட் மாறி சென்றுவிட்டார். இதனால் ரசிகர்களின் வெறுப்பை சம்பாதித்த ஜோவிகா கடந்த வாரம் எலிமினேட் ஆனார். ஜோவிகாவின் இந்த எவிக்ஷன் நியாயமற்றது வனிதா விஜயகுமார் விமர்சனம் செய்திருந்தார். ஜோவிகா வெளியே வந்ததும் தன் குருவான இயக்குனர் பார்த்திபனையும், தன் தாய் வனிதாவையும் ஏர்போர்டில் சர்ப்ரைஸாக சென்று சந்தித்து இன்ப அதிர்ச்சி கொடுத்தார்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
jovika, RJ Bravo
இந்த நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சியில் தன்னுடன் ஆடிய சக போட்டியாளரான பிராவோவையும் நேரில் சந்தித்ததோடு மட்டுமின்றி அவருடன் அவுட்டிங்கும் சென்றிருக்கிறார் ஜோவிகா. பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் ஜோவிகா வேலையில் பிசியான நிலையில், அவர் பணியாற்றும் இடத்துக்கே சென்ற பிராவோ அவரை சர்ப்ரைஸாக சந்தித்ததாக வனிதா விஜயகுமார் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் பதிவிட்டுள்ளார்.
RJ Bravo meet jovika
ஜோவிகாவை சந்தித்தபோது எடுத்த வீடியோவை பதிவிட்டு, ஜேபவிகாவை சந்தித்ததில் மகிழ்ச்சி என கலாய்க்கும் விதமாக பதிவு ஒன்றை போட்டிருக்கிறார் பிராவோ. இந்த சந்திப்புக்கும் பின்னர் இருவரும் ஒன்றாக சென்று ஓட்டலில் உணவருந்தி உள்ளனர். பிக்பாஸுக்கு பின்னர் ஜோவிகாவும், பிராவோவும் நட்புடன் பழகி வருவதை பார்த்த நெட்டிசன்கள் இந்த நட்பு தொடர வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படியுங்கள்... "அடுத்த வருஷமும் என் ராஜ்ஜியம் தான்".. படங்களை அடுக்கும் "நடிப்பு அரக்கன்" - S.J. சூர்யாவின் 2024 லிஸ்ட் இதோ!