Aishwarya Rajesh : உச்சகட்ட குஷியில் ஐஸ்வர்யா ராஜேஷ் - அடுத்த படத்தில் "சூப்பர் ஸ்டாருடன்" இணையும் வாய்ப்பு!
Actress Aishwarya Rajesh : நயன்தாரா ஸ்டைலில் பெண்களை முன்னிலை படுத்தும் படங்களில் தொடர்ச்சியாக நடித்து புகழ்பெற்று வரும் நடிகை தான் ஐஸ்வர்யா ராஜேஷ்.
Dear Movie
கடந்த 2023 ஆம் ஆண்டில் தமிழில் மட்டும் ஐந்து திரைப்படங்களில் நடித்திருந்த பிரபல நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், இந்த 2024 ஆம் ஆண்டிலும் தொடர்ச்சியாக தமிழ் மற்றும் மலையாள மொழி திரைப்படங்களில் நடித்து வருகிறார். ஏற்கனவே இவ்வாண்டு துவக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் ஜிவி பிரகாஷ் நடிப்பில் வெளியான டியர் திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
Attakathi
அது மட்டுமல்லாமல் "கருப்பர் நகரம்", "மோகன் தாஸ்" மற்றும் "தீயவர் கொலை நடுங்க" உள்ளிட்ட தமிழ் திரைப்படங்களிலும், இரு மலையாள திரைப்படங்களிலும் நடித்து வருகிறார் ஐஸ்வர்யா ராஜேஷ். கடந்த 2010 ஆம் ஆண்டு தமிழில் வெளியான "நீதானா அவன்" என்கின்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அவர் களமிறங்கினார்.
Shiva Rajkumar
தொடர்ச்சியாக நல்ல பல படங்களில் நடித்த அவருக்கு "அட்டகத்தி", "ரம்மி", "பண்ணையாரும் பத்மினியும்" மற்றும் "காக்கா முட்டை" போன்ற திரைப்படங்கள் தமிழ் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கொடுத்தது. இந்நிலையில் முதல் முறையாக கன்னட மொழியில் களமிறங்க உள்ள நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார் நடிக்கும் புதிய திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
உத்தர்கண்டா என்ற அந்த படத்தின் மூலம் அவர் கன்னட உலகில் கால்பதிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. பல முன்னணி நடிகர் நடிகைகள் இந்த படத்தில் நடித்து வருகின்றனர்.
Goundamani Daughter : சத்தமே இல்லாமல் கவுண்டமணி மகள் செய்யும் பேருதவி.. நெகிழ வைக்கும் செயல்..