டக்குனு மைக்கேல் ஜாக்சன் லுக்கிற்கு மாறிய நாயகி.. Black & White ஆடையில் நச்சுனு போஸ் கொடுத்த சாக்ஷி அகர்வால்!
Actress Sakshi Agarwal : பிரபல நடிகை சாக்ஷி அகர்வால் தற்போது தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் போட்டோஷூட் அவரது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது.
Sakshi
இயக்குனர் அட்லியின் "ராஜா ராணி" திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை உலகில் அறிமுகமான நடிகை சாக்ஷி அகர்வால், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் "காலா" மற்றும் தல அஜித்தின் "விசுவாசம்" உள்ளிட்ட திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்.
Actress Sakshi
தமிழில் இன்னும் கதையின் நாயகியாக சாக்ஷி அகர்வால் நடிக்கவில்லை என்றாலும், தற்போது அவரது நடிப்பில் உருவாகி வரும் ஒரு புதிய தமிழ் திரைப்படத்தில் அவர் முன்னணி கதாபாத்திரம் ஏற்று நடித்து வருவது குறிப்பிடத்தக்கது. அந்த திரைப்படத்தில் யோகி பாபு அவர்களும் கௌரவ வேடத்தில் நடித்துள்ளார் என்று கூறப்படுகிறது.
actress sakshi agarwal
தமிழ் மொழியில் மட்டுமல்லாமல் மலையாளத்திலும் தற்பொழுது பல திரைப்படங்களில் அவர் நடிக்க துவங்கியுள்ளார். மலையாளத்தில் அவர் நடிக்கும் ஒரு திரைப்படத்திற்காக அவர் விசேஷமாக களரி பயிற்சி அண்மையில் மேற்கொண்டதும் அனைவரும் அறிந்ததே.