Kanguva : டூயல் கெட்டப்பில் சூர்யா.. தமிழ் புத்தாண்டில் வெறித்தனமான அப்டேட் வெளியிட்ட கங்குவா படக்குழு!
Kanguva Update : தமிழ் புத்தாண்டை முன்னிட்டு சூர்யாவின் கங்குவா படத்தில் இருந்து புதிய போஸ்டர் ஒன்றை இப்பொது படக்குழு வெளியிட்டுள்ளது.
kanguva movie
தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக திகழ்ந்துவரும் சிறுத்தை சிவா இயக்கத்தில், இதுவரை தமிழ் சினிமாவில் வந்திராத ஒரு புதிய கதைகளத்தோடு உருவாகி உள்ள திரைப்படம் தான் "கங்குவா". இந்த படத்தில் பிரபல நடிகர் சூர்யா அவர்கள் இரு வெவ்வேறு கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
Actor Suriya
கடந்தாண்டு நடுப்பகுதியில் இருந்து இப்படத்திற்கான படப்பிடிப்பு பணிகள் நடந்து வரும் நிலையில், தற்போது இறுதி கட்ட பணிகள் நடந்து வருகிறது. இவ்வாண்டு இறுதிக்குள் இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சூர்யாவின் திரை வரலாற்றில் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகும் முதல் திரைப்படம் இதுவாகும்.
Kanguva
இந்நிலையில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு "கங்குவா" திரைப்படத்திலிருந்து ஒரு புதிய போஸ்டர் வெளியாகி உள்ளது. அதில் ஆதிகாலத்தில் வரும் சூர்யா ஒருபுறமும், தற்காலத்தில் வாழ்ந்து வரும் சூர்யா மறுபுறம் இருக்க ஒரு வித்தியாசமான போஸ்டரை படக்குழு தமிழ் புத்தாண்டு சிறப்பாக வெளியிட்டிருக்கிறது. இதை சூர்யாவின் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.