Asianet News TamilAsianet News Tamil

ஸ்மார்ட் வாட்ச் வாங்க செம சாய்ஸ்! AMOLED டிஸ்பிளே, 20 நாள் நீடிக்கும் பேட்டரியுடன் ரெட்மீ வாட்ச் 4 அறிமுகம்!

சியோமி நிறுவனம் Redmi K70 ஸ்மார்ட்போன் சீரிஸுடன் ஸ்மார்ட் வாட்சையும் அறிமுகப்படுத்தி இருக்கிறது. இந்திய மதிப்பில் புதிய ரெட்மி வாட்ச் 4 ஸ்மார்ட்வாட்ச் ரூ. 5,957 விலையைக் கொண்டிருக்கிறது.

Redmi Watch 4 smartwatch with AMOLED display, water-resistant design launched sgb
Author
First Published Nov 30, 2023, 8:42 PM IST

சியோமி (Xiaomi) நிறுவனம் சீனாவில் ரெட்மீ கே70 (Redmi K70) ஸ்மார்ட்போன் சீரிஸை அறிமுகப்படுத்திய நிகழ்ச்சியில் புதிய ஸ்மார்ட் வாட்சையும் அறிமுகப்படுத்தியுள்ளது.

புதிய ரெட்மீ வாட்ச் 4 அலுமினியதாலான சதுர டயல் வடிவமைப்பைக் கொண்டுள்ளது. நான்கு-சேனல் PPG சென்சார் கொண்ட இந்த ஸ்மார்ட்வாட்ச் ஒருமுறை சார்ஜ் செய்தால் 20 நாட்கள் நீட்டிக்கும் என்று கூறப்படுகிறது.

499 யுவான் (இந்திய மதிப்பில் ரூ.5,957) விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ள ரெட்மீ வாட்ச் 4 நேர்த்தியான கருப்பு மற்றும் சில்வர் ஸ்னோ ஒயிட் நிறங்களில் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்வாட்ச் தற்போது சீனாவில் விற்பனைக்கு வந்துவிட்டது. ஆனால், இந்தியாவில் இந்த வாட்ச் எப்போது கிடைக்கும் என்ற விவரம் இதுவரை வெளியாகவில்லை.

சைலென்ட்டா ரிலீஸ் செய்யப்பட்ட சாம்சங் கேலக்ஸி A15 ஸ்மார்ட்போன்! அப்படி என்ன சீக்ரெட் இருக்கு?

Redmi Watch 4 smartwatch with AMOLED display, water-resistant design launched sgb

ரெட்மீ வாட்ச் 4 390x450 பிக்சல் ரிசொல்யூஷனில் 1.97-இன்ச் AMOLED டிஸ்ப்ளே கொண்டிருக்கிறது. சியோமியின் ஹைப்பர் ஓ.எஸ் (HyperOS) இயங்குதளத்தில் இயக்குகிறது.

இந்த வாட்ச் பல சென்சார்களைக் கொண்டிருக்கிறது. அவற்றின் மூலம் மன அழுத்தம், இதய துடிப்பு, ஆக்ஸிஜன் மற்றும் தூக்கம் குறித்து கண்காணிக்க முடியும். ரெட்மி வாட்ச் 4 வாட்டர் ரெசிஸ்டெண்ட் உத்தரவாதத்துடனும் வருகிறது. 470 mAh பேட்டரி கொண்டிருக்கும் இந்த ஸ்மார்ட்வாட்ச் ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்தால் 20 நாட்கள் நீடித்து உழைக்கும் என்று சியோமி நிறுவனம் கூறுகிறது.

இதற்கிடையில், சியோமி சீனாவில் Redmi K70 சீரிஸ் மொபைல்களை அறிமுகப்படுத்தியுள்ளது. Redmi K70, Redmi K70 Pro மற்றும் Redmi K70E ஆகிய மூன்று ஸ்மார்ட்போன்களை வெளியிட்டுள்ளது. மூன்று ஸ்மார்ட்போன்களும் வேகமான சார்ஜிங் வசதியுடன் சியோமி HyperOS இயங்குதளத்தைக் கொண்டவை.

Simple Dot One EV: ஓலாவின் கொட்டத்தை அடக்கும் சிம்பிள்! ஸ்டார்ட்அப் நிறுவனத்தின் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்!

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும். Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

Follow Us:
Download App:
  • android
  • ios