Asianet News TamilAsianet News Tamil

Director Hari : தளபதிக்கு கதை ரெடியா இருக்கு... விஜய்யுடன் இணைவது குறித்து மனம் திறந்த இயக்குனர் ஹரி

ரத்னம் படத்தின் புரமோஷனுக்காக தியேட்டர்களுக்கு விசிட் அடிக்கும் இயக்குனர் ஹரி, திருச்சியில் உள்ள எல்.ஏ திரையரங்கிற்கு சென்றார்.

Director Hari Speaks about Rathnam Movie and Thalapathy Vijay Politics gan
Author
First Published Apr 23, 2024, 12:43 PM IST

ஹரி இயக்கத்தில் நடிகர் விஷால் நடிக்கும் ரத்னம் திரைப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் வரும் 26ஆம் தேதி வெளியாகிறது. படத்தின் ப்ரோமோஷன், டீசர் வெளியீட்டுக்காக இன்று திருச்சி மெயின்காட்கேட் பகுதியில் உள்ள எல்.ஏ திரையரங்கத்திற்கு ரத்னம் பட இயக்குனர் ஹரி, திரையரங்கில் ரசிகர்களை சந்தித்தார். தொடர்ந்தர் டீசர் வெளியிட்ட உடன் திரையரங்கில் மேடையில் அமர்ந்து ரசிகர்களோடு படடீசரை கண்டு மகிழ்ந்தார்.

விஷால் - ஹரி கூட்டணியில் 3வது படம்

தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த இயக்குனர் ஹரி, தரமான படத்தை கொடுங்கள் 20 வருடமானாலும் நாங்கள் பார்க்க தயாராக இருக்கிறோம் என்று ஆடியன்ஸ் தயாராகி விட்டார்கள். நாங்கள் நல்ல படத்தை எடுக்க முயற்சி செய்து கொண்டிருக்கும். பண்ணுவோம் என்ற நம்பிக்கை உள்ளது. இந்த படம் நானும் விஷாலும் இணைந்து செய்வது 3வது படம் மூன்றாவது என்பது ஒரு விளையாட்டு வீரர்களாக இருக்கட்டும், ஒரு புதிய முயற்சியை எடுப்பவர்களாக இருக்கட்டும் ஒரு காம்போ இன்ட்ரஸ்டிங்கா இருக்கும் பொறுப்பு அதிகமாக இருந்தது.

விஜய்யுடன் இணைய வாய்ப்பு இருக்கா?

ஒவ்வொரு சண்டை காட்சிகளும்,  ஒவ்வொரு காட்சிகளும் மிகவும் விறுவிறுப்பாக செய்துள்ளோம். முகம் சுழிப்பது போல் இருக்காது குடும்பத்துடன் இந்த படத்தை காணலாம். விஜய் வைத்து திரைப்படம் என்ற கேள்விக்கு அவருடைய டேட்ஸ் கிடைத்தால் உடனே செய்து விடலாம் கதையை தயாராக உள்ளது. விஜய் அரசியல் பிரவேசம் குறித்த கேள்விக்கு, அரசியல் நல்லது தான், இவ்வளவு பெரிய இடத்தில் இருக்கும் ஒரு நடிகர் சேவை செய்கிறேன் என்பது போற்றப்பட வேண்டிய வார்த்தை தான் சந்தோஷமானது ஒன்றுதான் அரசியல்வாதிகளே சந்தோஷமாக பெரிய விஷயமாக கருதுகின்றனர். நல்லபடியாக மக்களுக்கு சேவை செய்ய வேண்டும்.

இதையும் படியுங்கள்... Vishal : என்னது நான் தளபதி ஸ்டைலை Follow பண்றேனா? வாக்களிக்க சைக்கிளில் சென்றது ஏன்? அவரே கொடுத்த பலே பதில்!

சிங்கம் 3 பாகங்களுடன் நிறுத்தியது ஏன்?

விஷால் வருகிறேன் என்று சொல்லி இருக்கிறார் என்ற கேள்விக்கு, அவர் வருவதை குறித்து எனக்கு தெரியாது, வேறு மாதிரி சொல்லி உள்ளார். இந்தப் படத்தில் ஃபாஸ்ட் (Fast) இருக்காது. ஷார்ட்கட் இருக்காது ஆனால் ஸ்க்ரீன் பிளேவும், கதை அமைப்பும் Fastடாக இருக்கும். எட்டு ஆக்ஷன் உள்ளது. சார்ட்ஸ் ஒவ்வொன்றும் எல்லாருக்கும் புரியும் விதமாக அமைந்துள்ளது. சிங்கம் திரைப்படம் மூன்றாவதுடன் நிறுத்தி விட்டீர்களே என்ற கேள்விக்கு, மூன்று என்பதை நல்ல ரவுண்டாக இருந்தது. எனவே, அது நிறுத்திக் கொண்டுள்ளேன். ஆனால் இன்னொரு போலீஸ் படம் விரைவில் எடுக்க உள்ளேன். 

பிற மொழி படங்கள் இயக்குவீர்களா?

தமிழ் திரைப்பட இயக்குனர்கள ஹிந்தி, தெலுங்குக்கு செல்கிறார்கள் என்ற கேள்விக்கு, இங்கே நிறைய தயாரிப்பாளர்கள் வாய்ப்பு வழங்குகிறார்கள், நடிகர்கள் வாய்ப்பு தருகிறார்கள், இதுவே நேரம் சரியாக உள்ளது. பலர் அழைத்து கொண்டுதான் இருக்கிறார்கள். 
சூழல் ஏற்பட்டால் நேரம் கிடைத்தால் இயக்குவேன்.

ரத்னம் என பெயர் வைத்தது ஏன்?

ரத்னம் என்ற பெயர் வைக்க காரணம் என்ன என்ற கேள்விக்கு, துரைசிங்கத்திற்கு சிங்கம் என பெயர் வைத்தேன், தாமிரபரணியில் பரணி என்பதை தாமிரபரணி என  வைத்தோம். ரத்னம் என்ன பெயரை ஹீரோ பெயராகவே வைத்து விட்டோம். தாமிரபரணி, பூஜை எல்லாம் இன்டைரக்டாக பெயர் இதற்கு நேரடியாக பெயர் வைத்துள்ளோம். 

கெட்ட வார்த்தைகள் வைக்க காரணம் என்ன?

படத்தில் கெட்ட வார்த்தைகள் வருகிறது என்ற கேள்விக்கு, கெட்ட வார்த்தைகள் கோபத்தில் வருவதுதான், தகராறு ஏற்பட்டால் எல்லா வார்த்தைகளை வந்துவிடும். சும்மா இருக்கும்போது யாரும் அதை பேசுவதில்லை. சென்சாருக்கு போகிறது சில விஷயங்கள் கண்டிஷன் செய்கிறார்கள் எல்லாவற்றில் அப்படியே நாங்கள் ஆடியன்ஸ்டிடம் கொடுப்பதில்லை. அதற்குரிய தேவை இருந்தால் மட்டுமே சென்சாரில் அனுமதிக்கின்றனர். இல்லையென்றால் அனுமதிப்பதில்லை. அடுத்த படத்தினுடைய டிஸ்கஷன் 26 ஆம் தேதி இரவு தான் ஆரம்பிக்க வேண்டும்
என தெரிவித்தார்.

இதையும் படியுங்கள்... கல்கி 2898 AD.. அஸ்வத்தாமாவாக அமிதாப் பச்சன்.. கொடூர சாபம் பெற்ற அஸ்வத்தாமா இன்னும் உயிருடன் இருக்கிறாாரா?

Follow Us:
Download App:
  • android
  • ios