Asianet News TamilAsianet News Tamil

Paiyaa : சூப்பர் ஹிட்டான பையா.. 14 ஆண்டுகள் கழித்து ரீ-ரிலீஸ் - லிங்குசாமியை கட்டியணைத்து பாராட்டிய தமன்னா!

Paiyaa Re-Release : யுவன் சங்கர் ராஜா இசையில், பிரபல இயக்குனர் லிங்குசாமி இயக்கத்தில் கடந்த 2010ம் ஆண்டு வெளியாகி மெகா ஹிட்டான திரைப்படம் தான் பையா.

Actress Tamannaah Bhatia thanked director lingusamy for paiyaa on its re release ans
Author
First Published Apr 11, 2024, 8:31 PM IST

தமிழ் திரை உலகில் கடந்த 23 ஆண்டுகளில், மிக குறைவான அளவிலான படங்களையே இயக்கியிருக்கிறார் என்ற பொழுதும், பல வெற்றி திரைப்படங்களை கொடுத்த இயக்குனர் தான் லிங்குசாமி. கும்பகோணத்தை அடுத்த குடவாசலில் பிறந்த இவர் கடந்த 2001 ஆம் ஆண்டு மலையாள திரை உலகின் சூப்பர் ஸ்டாரான மம்மூட்டி நடிப்பில் வெளியான "ஆனந்தம்" என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக களம் இறங்கினார்.

அதன் பிறகு "ரன்", "ஜி", "சண்டக்கோழி", "பீமா" மற்றும் "பையா" உள்ளிட்ட திரைப்படங்கள் இவருக்கு மிகப்பெரிய வெற்றி திரைப்படங்களாக மாறியது. இறுதியாக கடந்த 2022 ஆம் ஆண்டு "தி வாரியர்" என்கின்ற திரைப்படத்தை இவர் எழுதி இயக்கி இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த திரைப்படம் தெலுங்கிலும் எடுக்கப்பட்ட நிலையில், இந்த திரைப்படத்தின் மூலம் தெலுங்கு திரை உலகிற்கும் அறிமுகமானார் லிங்குசாமி. 

மேடையில் பாடிக்கொண்டிருந்த அனிருத்.. சட்டென கையில் கிடைத்ததை அவர் மேல் வீசிய ரசிகர்கள் - அவர் ரியாக்ஷன் என்ன?

இந்நிலையில் கடந்த 2010 ஆம் ஆண்டு பிரபல நடிகர் கார்த்தி மற்றும் நடிகை தமன்னா நடிப்பில் வெளியான "பையா" என்கின்ற வெற்றி திரைப்படத்தை இயக்கியிருந்தார் லிங்குசாமி. இந்த திரைப்படத்தின் மூலம் இயக்குனர் லிங்குசாமி தயாரிப்பாளராகவும் அறிமுகமானது குறிப்பிடத்தக்கது. பட்டி தொட்டி எங்கும் ஹிட்டான இந்த திரைப்படத்தின் பாடல்கள் இன்றளவும் அவ்வளவு பசுமையாக இருக்கும்.

இந்த சூழலில் கடந்த சில நாட்களாகவே நல்ல பல பழைய திரைப்படங்கள் கோலிவுட்டில் ரீ ரிலீஸ் செய்யப்பட்ட வரும் நிலையில், தற்போது பையா திரைப்படம் 14 ஆண்டுகள் கழித்து ரீ ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. இதனை கொண்டாடும் விதமாக நடிகர் கார்த்தி மற்றும் நடிகை தமன்னா ஆகியோரை நேரில் சந்தித்து பூங்கொத்துகள் கொடுத்து தனது வாழ்த்துக்களை தெரிவித்து வந்தார் இயக்குனர் லிங்குசாமி. 

இதனை அடுத்து நடிகை தமன்னா தற்பொழுது வெளியிட்டுள்ள ஒரு X பதிவில், தானும் இயக்குனர் லிங்குசாமியும், பையா திரைப்படத்தில் பணியாற்றியது குறித்த பல அழகிய தருணங்களை நேரில் சந்தித்து அசைபோட்டதாக கூறி ஒரு பதிவை வெளியிடுள்ளார். 

Amala Paul : என் சாப்பாட்டை திருடும் "பேட் பாய்ஸ்" - கணவர் & சகோதரரை கழுவி ஊற்றிய அமலா பால்! Viral Video!

Follow Us:
Download App:
  • android
  • ios