Asianet News TamilAsianet News Tamil

தமிழக அரசில் வேலைவாய்ப்பு.. இடைநிலை ஆசியர்கள் உடனடி தேவை - எங்கே? எப்படி விண்ணப்பிப்பது? முழு விவரம்!

தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் இடைநிலை ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என்ற அறிக்கை தற்பொழுது வெளியாகி உள்ளது. இதுகுறித்த தகவல்களை பின்வருமாறு காணலாம்.
 

Secondary Teachers vacancy ariyalur adhi dravidar welfare department tamil nadu government jobs ans
Author
First Published Sep 28, 2023, 4:30 PM IST

பணி விவரம்

அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஆதிதிராவிடர் நலப் பள்ளிகளில் காலியாக உள்ள இடைநிலை ஆசிரியர்களுக்கான பணியிடங்களை நிரப்ப, தற்பொழுது பள்ளி மேலாண்மை குழுவின் மூலம் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ஆகவே இந்த பள்ளிகளில் தற்காலிகமாக பணியாற்ற இடைநிலை ஆசிரியர்கள் தேவை என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

கல்வித் தகுதி

இடைநிலை ஆசிரியர் பணியிடத்திற்கு கொடுக்கப்பட்டுள்ள கல்வி தகுதியுடன் ஆசிரியர் தகுதி தேர்வில் (TET) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

முன்னுரிமை

தமிழக அரசின் "இல்லம் தேடி கல்வியைத் திட்டத்தில்" தன்னார்வலராக பணியாற்றி வருபவர்களுக்கும், அல்லது பட்டியல் இனத்தை சேர்ந்தவர்களாக இருப்பின், அந்த விண்ணப்பதாரர்களுக்கும் முன்னுரிமை அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சம்பளம்

இந்த இடைநிலை ஆசிரியர் பணி, தற்காலிக பணி என்பது குறிப்பிடத்தக்கது. விண்ணப்பங்கள் மூலம் தேர்வு செய்யப்படும் ஆசிரியர்களுக்கு மாதம் 12,000 ரூபாய் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்க கடைசி நாள்

நாளை 29.9. 2023 வெள்ளிக்கிழமை இந்த விண்ணப்பங்கள் வந்து சேர கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை

மேற்கூறிய பணிகளுக்கு தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள், அரியலூர் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்திற்கு நேரடியாகவோ அல்லது அஞ்சல் மூலமோ தங்களது விண்ணப்பங்களை அனுப்பி வைக்கலாம். மாலை 5 மணிக்குள் இந்த விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வேலை! 8வது பாஸ் செய்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

Follow Us:
Download App:
  • android
  • ios