Asianet News TamilAsianet News Tamil

ஏப்ரல் 19ஆம் தேதி இந்த நகரங்களுக்கு மட்டும் வங்கிகளுக்கு விடுமுறை! ரிசர்வ் வங்கி அறிவிப்பு

ஏப்ரல் 19, 2024 அன்று பாதிக்கப்பட்ட நகரங்களான சென்னை, டேராடூன், இட்டாநகர், ஜெய்ப்பூர், கோஹிமா, நாக்பூர் மற்றும் ஷில்லாங் ஆகிய நகரங்களில் வங்கி விடுமுறை விடுவதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

Bank Holiday Alert: Financial Institutions To Close On April 19 In THESE Cities, Know Why sgb
Author
First Published Apr 17, 2024, 4:38 PM IST

ஏப்ரல் 19ஆம் தேதி மக்களவைத் தேர்தலில் வாக்களிக்க வாக்காளர்கள் தயாராக இருக்கிறார்கள். இந்நிலையில் நாடு முழுவதும் உள்ள பல நகரங்களில் வங்கிச் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட உள்ளன என்று இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) அறிவித்துள்ளது.

ஏப்ரல் 19, 2024 அன்று பாதிக்கப்பட்ட நகரங்களான சென்னை, டேராடூன், இட்டாநகர், ஜெய்ப்பூர், கோஹிமா, நாக்பூர் மற்றும் ஷில்லாங் ஆகிய நகரங்களில் வங்கி விடுமுறை விடுவதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

ஏழு கட்டங்களாக நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தல் ஜூன் 1, 2024 வரை முடிவடையும். பொதுமக்கள் வாக்களிக்கச் செல்வதற்கு வசதியாக தமிழ்நாடு  மற்றும் புதுச்சேரி அரசுகள் வாக்குப்பதிவு நாளை முன்னிட்டு ஏப்ரல் 19ஆம் தேதி பொது விடுமுறை அறிவித்துள்ளன.

Bank Holiday Alert: Financial Institutions To Close On April 19 In THESE Cities, Know Why sgb

இதேபோல், நாகாலாந்து மாநிலம், 1951 ஆம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், வாக்களிக்கும் நாளில், அரசு, தனியார் மற்றும் வணிகத் துறைகளில் உள்ள ஊழியர்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுமுறையை கட்டாயமாக்கியுள்ளது.

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மொத்தம் 40 மக்களவைத் தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இத்துடன் விளவங்கோடு சட்டமன்றத் தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடைபெறுகிறது. ஏப்ரல் 19ஆம் தேதி பொது விடுமுறை நாளாகவும் தமிழ்நாடு அறிவித்துள்ளது.

பல மாநிலங்கள் தேர்தல் நாளுக்கு பொது விடுமுறை அறிவித்துள்ள நிலையில், ஏப்ரல் 19ஆம் தேதி தேர்தல் நடைபெறும் அனைத்து மாநிலங்களுக்கும் வங்கி விடுமுறை அளிப்பதாக ரிசர்வ் வங்கி அறிவிக்கவில்லை.

தேர்தல் தினத்தைத் தொடர்ந்து, ஏப்ரல் 20, 2024 அன்று, திரிபுராவில் கரியா பூஜை வருவதால் அந்த மாநிலத்தில் வங்கிகள் மூடப்படும் எற்று ஆர்பிஐ கூறுகிறது.

பிரச்சாரத்தின்போது நாம் தமிழர் கட்சி வாகனத்தின் கண்ணாடியை உடைத்த அதிமுகவினர்

Follow Us:
Download App:
  • android
  • ios