Asianet News TamilAsianet News Tamil

இயற்கை பூச்சி விரட்டி செய்ய என்னென்ன தேவை? எப்படி செய்யணும்?

What is needed to drive a natural pest? How do you do
What is needed to drive a natural pest? How do you do
Author
First Published Apr 19, 2018, 11:22 AM IST


இயற்கை பூச்சி விரட்டி செய்ய  தேவையான பொருட்கள்: 

(ஒரு ஏக்கருக்கு தேவையான அளவுகள்)

1. காட்டாமணக்கு – 1/2 கிலோ

2. குமிட்டிகாய் – 1/2 கிலோ

3. ஊமத்தை – 1/2 கிலோ

4. பீச்சங்கு – 1/2 கிலோ

5. சோற்றுக்கற்றாழை – 1/2 கிலோ

6. எருக்கு – 1/2 கிலோ

7. அரளி – 1/2 கிலோ

8. நொச்சி – 1/2 கிலோ

9. சப்பாத்திக் கள்ளி – 1/2 கிலோ

10. ஆடா தோடா – 1/2 கிலோ

11. நெய்வேலி காட்டாமணக்கு- 1/2 கிலோ

12. வேம்பு – 1/2 கிலோ

13. மாட்டு கோமியம் – 1/2 கிலோ

14. மாட்டு சாணம் – 1/2 கிலோ

15. மஞ்சள் தூள் – 1/2 கிலோ

செய்வது எப்படி?

மேலே குறிப்பிட்டடுள்ளவைகளில் குறைந்தது 5 வகை தாவரத்தின் இலை தழைகளை எடுத்து சிறு துண்டுகாளக நறுக்கி, உரலில் இட்டு இடித்து மசித்து கொள்ளவும். 

மசித்த இலை தழைகளை 15 லிட்டர் மாட்டு கோமியத்தில் ஊற வைத்து, பின்னர் மஞ்சள் தூள் 250 கிராம், சாணம் 1 கிலோ, புகையிலை கரைசல் 1 லிட்டர் கலந்து 15 நாட்கள் நொதிக்க விட வேண்டும். 

அதற்கு பின் கரைசலை வடிகட்டி தெளிவான கரைசலை பயிர்களுக்கு தெளிக்கப்பயன்படுத்தலாம்.

பயன்படுத்தும் முறை:

இலைவழி ஊட்டம்/தெளிப்பு: பத்து லிட்டர் நீருக்க 500 மி.லிட்டர் பூச்சி விரட்டியை கலந்து (5 விழுக்காடு) தெளிக்க பயன்படுத்தலாம்.

சிறப்பான தன்மைகள்:
1  எளிதில் தயாரிக்கலாம்

2. குறைவான முதலீடு

3.தானியங்கள், காய்கறிகள் மற்றும் பழங்களில் எவ்விதமான விஷ வீழ்படிவையும் ஏற்படுத்தாது.

4. இயற்கையை பாதிக்காதவை 

பூச்சிவிரட்டி கரைசல் 75% பூச்சிவிரட்டியாகவும் 25% பயிர் வளர்ச்சி ஊக்கியாகவும் மற்றும் நோய் தடுப்பானாகவும் செயல்படுகின்றது.

Follow Us:
Download App:
  • android
  • ios