Asianet News TamilAsianet News Tamil

வெள்ளாடு வளர்ப்பதால் எவ்வளவு நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? இதை வாசிங்க தெரியும்...

Do you know how much benefits can be made from goat farming? Know this ...
Do you know how much benefits can be made from goat farming? Know this ...
Author
First Published May 25, 2018, 2:40 PM IST


வெள்ளாடு வளர்ப்பின் நன்மைகள்

வெள்ளாடு வளர்ப்பில் முதலீடு மிகவும் குறைவு. இவை அளவில் சிறியதாக உள்ளதால், கொட்டகைப் பராமரிப்புச் செலவு குறைவு. ஆடுகள் மிகக் குறைந்த காலத்தில் 10-12 மாதங்களில் பருவ வயதை அடைந்து விடும்.

இவை, 16-17 மாதங்களில் குட்டி ஈன்று விடும். பொதுவாக ஆடுகள் ஒரு தருணத்தில் 2 குட்டிகள் மட்டுமே போடும். 3 அல்லது 4 குட்டிகள் போடுவது மிகவும் அரிது. வறண்ட நிலங்களில் மற்ற கால்நடைகளை விட வெள்ளாடு வளர்ப்பே சிறந்ததாகும்.

ஆடுகள், பலவகைப்பட்ட பயிர்களையும் உண்பவை. இவை முட்புதர்கள், வேளாண் பயிர்க் கழிவுகள், வேளாண் உப விளைபொருள்கள் போன்றவற்றை உண்பதால் தீவனப் பராமரிப்புச் செலவு குறைவு. ஆட்டு இறைச்சியில், பன்றி இறைச்சியை விட கொழுப்பு குறைவாகவே உள்ளது.

பசும்பாலை விட வெள்ளாட்டுப் பால் எளிதில் செரிக்கக் கூடியது. இதில், ஒவ்வாமை ஏதும் ஏற்படுவதில்லை. மேலும் வெள்ளாட்டுப் பாலில் சிறிய கொழுப்பு திரள்களே உள்ளன. பாக்டீரியா, பூஞ்சை எதிர்ப்பொருள்கள் அதிக அளவு உள்ளதால், நோய் எதிர்ப்பாற்றல் குறைவு. 

வெள்ளாடு, செம்மறி ஆட்டுடன் ஒப்பிடும்போது 2.5 மடங்கு பொருளாதார அளவில் மிதவெப்பப் பகுதிகளுக்கு ஏற்றவை. ஆட்டிலிருந்து கிடைக்கும் தோல், முடி ஆகியவையும் பதனிடு தொழிற்சாலைகளில் பயன்படுகின்றன. கிராமப்புறப் பகுதிகளில் கூலி வேலை செய்வோருக்கும், ஏழைகளுக்கும் இவ்வளர்ப்பு மிகவும் உகந்தது.

வயது முதிர்ந்த ஆடுகளை வாங்கும்போது, அதன் பால் உற்பத்தித் திறனை அறிந்த பின் வாங்குதல் நலம். ஒரு நாளின் உற்பத்தி அளவு என்பது அடுத்தடுத்த இரண்டு கறத்தலில் பாலின் அளவு 0.5 லிட்டர் அதிகமாக இருப்பதாகும்.

இந்த அளவு, குட்டிகள் ஊட்டியது போல மீதமுள்ள அளவாகும். இளம் ஆடுகளை வாங்கும் போது, அதன் குட்டி ஈனும் உற்பத்தி அளவைப் பார்த்து வாங்குதல் வேண்டும். அதோடு ஆடு எந்த ஒரு உடல் குறைபாடும் இன்றி இருக்க வேண்டும்.

ஆடுகளின் 120 நாள் பால் உற்பத்தி அளவை வைத்தும், 2 வருட வயதில் அது ஈன்ற குட்டிகள் எண்ணிக்கையை வைத்தும் ஆட்டின் செயல்திறனைக் கணிக்கலாம். தமிழ்நாட்டில் மூன்று வகையான வெள்ளாட்டு இனங்கள் உள்ளன. 

அவை கன்னி ஆடுகள், கொடி ஆடுகள், சேலம் கருப்பு, கன்னி ஆடுகள் ஆகும். இம்மூன்று இனங்களும் இறைச்சி, தோலுக்காகவே பெரும்பாலும் வளர்க்கப்படுகின்றன.
 

Follow Us:
Download App:
  • android
  • ios