Tamil

ஒரே வாட்ஸ்அப்பில் 2 அக்கவுன்ட்... ரொம்ப சிம்பிள்!

Tamil

டூயல் சிம் போன்கள்

இப்போதெல்லாம் டூயல் சிம் போன்கள் சாதாரணமாகிவிட்டது. நம்மில் பலரும் இரண்டு சிம்களை பயன்படுத்துகிறோம். ஆனால், வாட்ஸ்அப்பில் ஒரே ஒரு சிம்மை மட்டுமே பயன்படுத்த வேண்டிய நிலை இருந்தது.

Image credits: FreePik
Tamil

லாக் அவுட் செய்ய வேண்டிய நிலை

ஒருவேளை, உங்களிடம் உள்ள இரண்டு சிம்களிலும் வாட்ஸ்அப் பயன்படுத்த விரும்பினால், ஒரு அக்கவுன்ட்டை லாக் அவுட் செய்துவிட்டு, மற்றொரு அக்கவுன்ட்டில் லாகின் செய்ய வேண்டியிருந்தது.

Image credits: FreePik
Tamil

பிரச்னைக்கு வாட்ஸ்அப் தீர்வு

இந்தப் பிரச்னையை தீர்க்கத்தான் வாட்ஸ்அப் 'ஸ்விட்ச் அக்கவுன்ட்ஸ்' (Switch Accounts) என்ற புதிய அம்சத்தை கொண்டு வந்துள்ளது. இதனால் ஒரே நேரத்தில் இரண்டு அக்கவுன்ட்களை இயக்கலாம்.

Image credits: stockphoto
Tamil

எப்படி ஆக்டிவேட் செய்வது?

வாட்ஸ்அப் செயலியில் வலது பக்கம் மேலே உள்ள மூன்று புள்ளிகளை கிளிக் செய்ய வேண்டும். பின்னர் செட்டிங்ஸ் ஆப்ஷனுக்குள் சென்று, 'அக்கவுன்ட்' (Account) என்பதைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

Image credits: FreePik
Tamil

'ஆட் அக்கவுன்ட்' ஆப்ஷன்

அதற்குப் பிறகு, அங்கு தோன்றும் 'ஆட் அக்கவுன்ட்' (Add Account) என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும். உடனே, அடுத்தகட்ட செயல்முறை தொடங்கும்.

Image credits: FreePik
Tamil

இரண்டாவது சிம் நம்பர்

அடுத்து, உங்கள் போனில் உள்ள இரண்டாவது சிம் எண்ணை உள்ளிட வேண்டும். இதன் மூலம் உங்கள் இரண்டாவது வாட்ஸ்அப் அக்கவுன்ட் திறக்கப்படும்.

Image credits: stockphoto
Tamil

'ஸ்விட்ச் அக்கவுன்ட்' வசதி

இந்த செயல்முறை முடிந்ததும், மீண்டும் 3 புள்ளிகளை கிளிக் செய்தால் 'ஸ்விட்ச் அக்கவுன்ட்' (Switch Account) என்ற ஆப்ஷன் தோன்றும். பின்னர் நீங்கள் விரும்பும் அக்கவுன்ட்டிற்கு மாறலாம்

Image credits: stockphoto

Google Maps : தொலைந்த ஃபோனை கூகுள் மேப் வச்சு எப்படி கண்டுபிடிக்கறது?

Google Maps: போன் தொலைஞ்சு போச்சா? கூகுள் மேப்ஸ்ல் ஈஸியா கண்டுபிடிக்கலாம்!

கோடை வெப்பத்தில் செல்போன் அதிகம் சூடாகிறதா? இதை செஞ்சி பாருங்க

iPhone 16e: அதிரடி அம்சங்களுடன் கெத்து காட்டும் ஐபோன் 16e