இந்திய மகளிர் கிரிக்கெட் வீராங்கனை ஸ்மிருதி மந்தனா தற்போது அபாரமான ஃபார்மில் உள்ளார். சமீபத்தில் அவர் அயர்லாந்துக்கு எதிரான மூன்று ஒருநாள் போட்டிகளில் கேப்டனாகவும் செயல்பட்டார்.
அதிவேக சதம்
ஸ்மிருதி மந்தனா அயர்லாந்துக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் 70 பந்துகளில் சதம் அடித்து அசத்தினார். 80 பந்துகளில் 134 ரன்கள் எடுத்து அணிக்கு வெற்றியை தேடித்தந்தார்.
கார்களில் பயணிக்க ஆர்வம்
கிரிக்கெட்டைத் தவிர, ஸ்மிருதி மந்தனா தனிப்பட்ட வாழ்க்கையிலும் அதிகம் பேசப்படும் நபராக உள்ளார். அவருக்கு சொகுசு கார்களில் பயணிக்க மிகவும் விருப்பம்.
விலையுயர்ந்த கார்களின் சேகரிப்பு
ஸ்மிருதி மந்தனா விலையுயர்ந்த மற்றும் சொகுசு கார்களை அதிகம் வைத்துள்ளார். கடின உழைப்பின் மூலம் இவை அனைத்தையும் அவர் சாத்தியமாக்கியுள்ளார்.
எத்தனை கார்கள்?
ஸ்மிருதி மந்தனாவிடம் மாருதி சுசுகி ஸ்விஃப்ட் டிசையர், ஹூண்டாய் கிரெட்டா, லேண்ட் ரோவர், ரேஞ்ச் ரோவர் இவோக், ஆடி மற்றும் பிஎம்டபிள்யூ கார்கள் உள்ளன.
முதல் கார் என்ன?
ஸ்மிருதி மந்தனா முதன்முதலில் மாருதி சுசுகி ஸ்விஃப்ட் டிசையர் காரை தான் வாங்கினார். அதன்பிறகு ஏராளமான கார்களை வாங்கி குவித்து விட்டார்.
லேண்ட் ரோவர்
அக்டோபர் 2022ம் ஆண்டு சிலிக்கான் சில்வர் நிறத்தில் லேண்ட் ரோவர் ரேஞ்ச் ரோவர் இவோக் மாடல் காரை வாங்கினார். இதன் விலை ரூ.72.09 லட்சம் என்பது குறிப்பிடத்தக்கது.