sports
21 வயதான இளம் மல்யுத்த வீரர் அமன் ஷெராவத் பாரிஸ் ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்று புதிய வரலாறு படைத்துள்ளார்.
ஒலிம்பிக் வரலாற்றில் இந்தியாவிற்கு முதல் பதக்கத்தை கே.டி. ஜாதவ் 1952-ம் ஆண்டு ஹெல்சிங்கி வெண்கலம் வென்றார்.
மல்யுத்த வீரர் சுஷில் குமார் 2008ம் ஆண்டு பீஜிங் ஓலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்றார். அதேபோல் 2012ம் ஆண்டு லண்டன் ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்றார்.
ஹரியானா மல்யுத்த வீரர் யோகேஷ்வர் தத், 2012ம் ஆண்டு லண்டன் ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்றார்.
இந்திய மகளிர் மல்யுத்த வீராங்கனை சாக்ஷி மாலிக், 2016ம் ஆண்டு ரியோ ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்றார்.
இந்திய மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா டோக்கியோ ஒலிம்பிக் 2020-ல் வெண்கலப் பதக்கம் வென்றார்.
பஜ்ரங் புனியாவைத் தொடர்ந்து ரவி தஹியாவும் டோக்கியோ ஒலிம்பிக் 2020-ல் வெள்ளிப் பதக்கம் வென்றார்.