sports

விராட் கோலியைப் பாராட்டிய ஹர்பஜன் சிங்

2011 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியில் விராட் கோலி, ஹர்பஜன் சிங் இடம் பெற்றிருந்தனர். இந்த முறை முன்னாள் சக வீரர் விராட்டைப் பாராட்டினார் ஹர்பஜன்.

விராட் கோலியை 19 வயது இளைஞருடன் ஒப்பிட்டார் ஹர்பஜன்

'19 வயது நிரம்பிய ஒருவரை விராட்டுடன் போட்டியிடச் சொல்லுங்கள். விராட் அவரைத் தோற்கடித்து விடுவார். அவர் மிகவும் தகுதியானவர்,' என்று ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார். 

விராட் கோலி மேலும் 5 ஆண்டுகள் விளையாடலாம் - ஹர்பஜன்

ஹர்பஜன் சிங் கூறுகையில், 'விராட் கோலியின் உடற்தகுதி பற்றி எதுவும் சொல்ல முடியாது. அவர் இன்னும் 5 ஆண்டுகள் விளையாடலாம். அவர்தான் அணியின் மிகவும் தகுதியான வீரர்' என்றார்.

ரோகித் சர்மாவை விட விராட் கோலிதான் Fit - ஹர்பஜன்

டெஸ்ட், ஒருநாள் போட்டிகளில் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா இன்னும் 2 ஆண்டுகள் விளையாடலாம். ஆனால் ரோகித்தை விட கோலி உடற்தகுதியில் சிறந்து விளங்குவதாக ஹர்பஜன் கருதுகிறார்.

விராட் கோலி, ரோகித் சர்மா பார்மில் இருந்தால் விளையாடட்டும்

கோலி மற்றும் ரோகித் சர்மா குறித்து ஹர்பஜன் சிங் கூறுகையில், 'அவர்கள் ஃபிட்டாக இருந்தால், நல்ல பார்மில் இருந்தால், அணி வெற்றி பெற்றால், அவர்கள் தொடர்ந்து விளையாட வேண்டும்' என்றார்.

டெஸ்ட் தொடரில் பார்முக்கு திரும்ப தயாராகும் விராட் கோலி

இலங்கை சுற்றுப்பயணத்தில் ஒருநாள் தொடரில் விராட் கோலி சிறப்பாக செயல்படவில்லை.  சொந்த மண்ணில் நடைபெறும் டெஸ்ட் தொடரில் சிறப்பாக செயல்பட வேண்டும்.

சச்சின் முதல் பாண்டிங் வரை: உலகின் டாப் 10 பணக்கார கிரிக்கெட் வீரர்கள்

டீமில் இடம் பெறுவதற்கு முன் கோடிகளில் புரண்ட இந்திய வீரர்கள் யார் யார்

டெஸ்ட் கிரிக்கெட்டில் சாதனை படைத்த கேசவ் மகராஜ்

ரோகித் சர்மாவுக்கு எத்தனை கோடி? MIல் அதிக சம்பளம் வாங்கும் வீரர்கள்!