2024 சீசனில் கோப்பை வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஐபிஎல் 2025இல் மோசமான நிலையில் உள்ளது. இனி அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்றால் தான் பிளேஆஃப் சுற்றுக்குள் நுழைய முடியும்.
Tamil
தோல்விக்கான ஐந்து காரணங்கள்
KKR அணிக்கு ஐபிஎல் 2025 சீசன் இதுவரை மோசமாக அமைந்ததற்கான 5 முக்கிய காரணங்களைப் பற்றி இங்கே காண்போம்.
Tamil
23 கோடி வீரர் தோல்வி
KKR அணி 23 கோடி ரூபாய் செலவில் வெங்கடேஷ் ஐயரை ஏலத்தில் எடுத்தது. ஆனால் அவர் எதிர்பார்த்த பங்களிப்பை அளிக்கவில்லை.
Tamil
ஷ்ரேயாஸ் ஐயர் நீக்கம்
ஐபிஎல் 2024 பட்டத்தை வென்று கொடுத்த ஷ்ரேயாஸ் ஐயர் மீது அணி நிர்வாகம் நம்பிக்கை வைக்கவில்லை. அவரை அணியில் தக்க வைக்காதது பெரும் பின்னடைவாகும்.
Tamil
பில் சால்ட் இழப்பு
அதிரடி வீரர் பில் சால்ட்டை கைவிட்டது KKR அணிக்குப் பெரும் பின்னடைவு. ஐபிஎல் 2024இல் அவர் சிறப்பாக ஆடியும் தக்கவைக்கப்படவில்லை.
Tamil
ரகுவன்ஷிக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை
சிறந்த இளம் வீரரான ரகுவன்ஷிக்கு போதிய வாய்ப்பு அளிக்கப்படுவதில்லை. நேற்று குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் கூட அவரை 9வது இடத்தில் களமிறக்கியது அனைவரின் எதிர்ப்பையும் சம்பாதித்தது.
Tamil
ரமன்தீப் சிங்குக்கு தொடர் வாய்ப்பு
ரமன் தீப் சிங் மோசமான ஃபார்மில் இருந்தும் அவருக்கு தொடர்ந்து வாய்ப்பு அளிக்கப்படுகிறது. இது அணிக்குப் பெரும் பின்னடைவாக உள்ளது.