வெஸ்ட் இண்டீஸூக்கு எதிரான டெஸ்ட் தொடரில் கேசவ் மகராஜ் 2 போட்டிகளில் 13 விக்கெட்டுகளை வீழ்த்தினார் அவர் தொடரின் சிறந்த கிரிக்கெட் வீரராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
புதிய சாதனை படைத்தார் கேசவ் மகராஜ்
டெஸ்ட் கிரிக்கெட்டில் தென் ஆப்பிரிக்காவிற்காக அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய சாதனையைப் படைத்துள்ளார் கேசவ் மகராஜ்.
ஹக் டேஃபீல்டு
டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய சாதனை முன்னாள் பந்து வீச்சாளர் ஹக் டேஃபீல்டு (170 விக்கெட்டுகள்) வைத்திருந்தார். அந்த சாதனையை கேசவ் மகராஜ் முறியடித்துள்ளார்.
8 ஆண்டுகால சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கை
2016 ஆம் ஆண்டு பெர்த்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமானார். இதுவரை 52 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 171 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
டெஸ்ட் கிரிக்கெட்டில் சிறந்த பந்துவீச்சாளர்
இதுவரை 44 ஒருநாள் போட்டிகள் மற்றும் 35 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார் கேசவ் மகராஜ். வெள்ளை பந்து கிரிக்கெட்டில் மொத்தம் 90 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
SA20 டி20 லீக்
SA20 லீக்கில் பார்படோஸ் ராயல்ஸ் அணிக்காக விளையாடுகிறார் கேஷவ் மஹராஜ். ஐபிஎல் போட்டிகளில் கடந்த சீசனில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இடம் பெற்றிருந்தார் வீச்சாளர்.