spiritual

படுக்கையில் ஏன் அமர்ந்து சாப்பிட கூடாது தெரியுமா?

வாஸ்து

வாஸ்து சாஸ்திரம்என்பது இந்து மத மக்கள் காலம் காலமாக பின்பற்றுகின்றனர். அந்த வகையில் வாஸ்து படி, படுக்கையில் அமர்ந்து சாப்பிடக்கூடாது அது ஏன் தெரியுமா?

வறுமைக்கு அறிகுறி

வாஸ்து சாஸ்திரத்தின் படி, படுக்கையில் அமர்ந்து சாப்பிடுவது வறுமையை கொண்டுவரும். எப்போதும் கிழக்கு அல்லது வடக்கு திசையை நோக்கி தரையில் அமர்ந்து சாப்பிட வேண்டும். 

லட்சுமி வாசம் இருக்காது

நீங்கள் தினமும் படுக்கையில் அமர்ந்து சாப்பிட்டால் லட்சுமி தேவி உங்களை விட்டு விலகிவிடுவாள். படுக்கை என்பது தூங்குவதற்கான இடம், அங்கு ஒருபோதும் சாப்பிடக்கூடாது.

வீட்டில் அமைதி குறையும்

வீட்டில் எந்த காரணமும் இல்லாமல் அமைதி குறைவது படுக்கையில் சாப்பிடுவதால் கூட இருக்கலாம். எனவே நீங்கள் இந்த பழக்கத்தை மாற்றிக்கொள்ள வேண்டும்.

கடன் அதிகரிக்கும்

வாஸ்து சாஸ்திரத்தின் படி, படுக்கையில் அமர்ந்து சாப்பிடுபவர்களுக்கு பெரும் கடன் ஏற்படும், இது துக்கத்திற்கு காரணமாக அமையும்.

தூக்கம் பாதிக்கப்படும்

படுக்கையில் அமர்ந்து சாப்பிடுபவர்களுக்கு தூக்கம் சரியாக வராது. பல நேரங்களில் உணவின் வாசனையால் கரப்பான் பூச்சிகள் படுக்கையில் வரும்.

உணவு தட்டை உயரத்தில் வை

எப்போதும் சாப்பிடும் தட்டை நாம் அமர்ந்திருக்கும் இடத்தை விட உயரத்தில் வைக்க வேண்டும். இது அன்னபூரணியை மதிப்பதாக கருதப்படுகிறது. 

Find Next One