spiritual

தீபாவளி 2024-ல் இந்த 6 செயல்களைச் செய்தால் லட்சுமி தேவி கோபப்படுவாள்

தீபாவளி 2024 எப்போது?

Diwali 2024: அக்டோபர் 31, வியாழக்கிழமை தீபாவளி. இந்த நாளில் சில காரியங்களை தெரியாமல் கூட செய்யக்கூடாது இல்லையெனில் லட்சுமி தேவி கோபப்படுவார்.

கருப்பு உடைகள் அணிய வேண்டாம்

தீபாவளி பூஜையின் போது கருப்பு உடைகள் அணிய கூடாது. இந்த நிறம் எதிர்மறையின் அடையாளம். சுப நிகழ்வுகளிலும், பூஜைகளிலும் இந்த நிற ஆடைகளை அணிவதைத் தவிர்க்க வேண்டும்.

யாரையும் வெறுங்கையுடன் அனுப்ப வேண்டாம்

தீபாவளி நாளில் பலரும் உங்களது வீட்டிற்கு வருவார்கள், போவார்கள். அவர்களை வெறுங்கையுடன் திருப்பி அனுப்ப கூடாது. இல்லையென்றால் லட்சுமி தேவி வீட்டிற்கு வரமாட்டாள்.

அசைவம், மது பயன்படுத்த கூடாது

தீபாவளி அன்று லட்சுமி தேவியுடன் விநாயகர் மற்றும் சரஸ்வதி தேவியும் வழிபடப்படுகிறார்கள். இந்த நாளில் அசைவம், மது போன்றவற்றை தவிர்க்க வேண்டும்.

பிரம்மச்சரியம் கடைபிடியுங்கள்

தீபாவளி இரவில் கணவன் மனைவி பிரம்மச்சரியம் கடைபிடிக்க வேண்டும். இது கட்டாயம். இந்த விதியை மீறுபவர்கள் எதிர்காலத்தில் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.

யாரிடமும் கோபப்பட வேண்டாம்

கோபப்படும் மக்கள் வாழும் வீட்டில் லட்சுமி தேவி வசிக்க மாட்டார் என்று கூறப்படுகிறது. தீபாவளி அன்று யாரிடமும் கோபப்படவோ, யாரையும் அவமதிக்கவோ வேண்டாம்.

கெட்ட எண்ணங்களை வளர்க்க வேண்டாம்

தீபாவளி புனிதமான பண்டிகை. இந்த நாளில் யாரிடமும் கெட்ட எண்ணங்களை வளர்க்க வேண்டாம். அவ்வாறு செய்வதால் லட்சுமி தேவி கோபப்படுவாள். மேலும் எதிர்காலத்தில் கெட்ட பலன்கள் ஏற்படலாம்.

ஆத்தாடி இங்கெல்லாம் தீபாவளி கொண்டாடுறாங்களா? சூப்பர்ரு!

படுக்கையில் ஏன் அமர்ந்து சாப்பிட கூடாது தெரியுமா?

நவராத்திரி பூஜையில் அறியாமலும் கூட செய்யக்கூடாத முக்கிய தவறுகள்!

வீட்டிற்கு கருப்பு எறும்பு வருவது அதிர்ஷ்டமா..?