முட்டை, விந்தணு இல்லை; சிந்தடிக் செல்களால் உருவாக்கப்பட்ட செயற்கை மனிதக்கரு; அறிவியலின் அடுத்த பிரமிப்பு!!
முட்டை, விந்தணுக்கள் இல்லாமல் ஸ்டெம் செல்களைப் பயன்படுத்தி செயற்கை மனித கருக்களை கலிபோர்னியா இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி மற்றும் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளனர்.
மனித இனப்பெருக்கத்திற்கு தற்போது இன் விட்ரோ கருத்தரித்தல் (IVF) பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதாவது ஆணின் விந்தணு, பெண்ணின் முட்டை இரண்டையும் எடுத்து சேர்த்து, இன்குபெட்டரில் வளர்த்து கருவானவுடன் குறிப்பிட்ட நாட்களுக்குப் பின்னர் பெண்ணின் கருப்பையில் வைக்கின்றனர். இப்படி ஒரு கரு மட்டும் வைப்பதில்லை. நான்கைந்து சேர்த்து ஒரே நேரத்தில் பெண்ணின் கருவில் வைப்பார்கள்.
அப்படி வைக்கப்படும் செயற்கை கருக்கள் கர்ப்பபையில் வளர்ந்து குழந்தையாக பிறக்கிறது. இந்த செயற்கை கருத்தரிப்பு முறையில் ஒரே முயற்சியில் கருத்தரித்து விடுவார்கள் என்று கூறிவிட முடியாது. சிலருக்கு ஆகாமலேயே போகலாம், சிலருக்கு ஒரே முயற்சியில் கருத்தரித்துவிடுவார்கள். இந்த செயற்கை கருத்தரிப்புக்கு தற்போது அதிகளவில் வரவேற்பு இருக்கிறது. கணவருடன் பிரிந்து பெண்கள், விவாகரத்து பெற்றவர்கள் இந்த முறையில் குழந்தையை பெற்றுக் கொள்கின்றனர். இது இயற்கைக்கு முரணானது என்று ஒருபக்கம் வாதிடுபவர்களும் இருக்கின்றனர். ஆனால், மற்றொரு பக்கம் இல்லை இதுவும் இயற்கைதான் என்கின்றனர்.
சிறப்பாக முதலிரவு கொண்டாட பேனர்! புது மாப்பிள்ளைக்கு இலங்கை, துபாய், கத்தார் நண்பர்கள் வாழ்த்து
ஆனால் தற்போது சிந்தடிக் கரு உருவாக்கல் செய்யப்பட்டு இருக்கிறது. கலிபோர்னியா இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி மற்றும் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் முட்டை, விந்தணுக்கள் இல்லாமல் ஸ்டெம் செல்களைப் பயன்படுத்தி செயற்கை மனித கருக்களை உருவாக்கியுள்ளனர்.
இந்த முறையிலான மனித கருக்களை உருவாக்க முட்டை மற்றும் விந்தணுக்களின் தேவை இல்லை என்ற நிலை ஏற்பட்டுள்ளது.
'செயற்கை' கரு எப்படி இருக்கும்?
ஸ்டெம் செல்கள் மூலம் உருவாக்கப்பட்ட இதற்கு துடிக்கும் இதயம் அல்லது மூளை உருவாக்கம் இல்லை. இருப்பினும், அவை நஞ்சுக்கொடி, மஞ்சள் கரு மற்றும் கருவை உருவாக்கும் செல்களைக் கொண்டுள்ளன.
தினமும் 2 பல் பூண்டு மட்டும் சாப்பிட்டால் போதும்.. ஒரே வாரத்தில் உங்க 'பிபி' கட்டுக்குள் வரும்..!!
'செயற்கை' கரு ஏன் தேவைப்படுகிறது?
மீண்டும் மீண்டும் கருச்சிதைவு ஏற்படுவதற்கான உயிரியல் காரணங்கள் குறித்த தகவல்களைப் பெறுவதற்கு இந்த சிந்தடிக் செயற்கை கரு உதவும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.
ஏப்ரல் 2021-ல் தி லான்செட்டில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வறிக்கையின்படி, உலகளவில், ஆண்டுதோறும் 23 மில்லியன் கருச்சிதைவுகள் ஏற்படுவதாக மதிப்பிடப்பட்டுள்ளது.