life-style
கணினி அல்லது மடிக்கணினி முன் பல மணி நேரம் உட்காருபவராக இருந்தால், உங்களுக்கு பல நோய்கள் வரும் அபாயம் உள்ளது.
நீண்ட நேரம் உட்கார்ந்திருப்பதால் மிக எளிதாக உங்கள் எடை அதிகரிக்கும். இது நோய்க்கான அபாயத்தையும் அதிகரிக்கிறது.
நீண்ட நேரம் உட்கார்ந்திருப்பவர்கள் பதட்டம், Frustration, மன அழுத்தம் போன்ற மனநலப் பிரச்சினைகளை சந்திக்க நேரிடும்.
நீண்ட நேரம் உட்கார்ந்து வேலை செய்வதால் நீரிழிவு நோய் வருவதற்கான ஆபத்தும் உள்ளதாக சுகாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.
தற்போது பலர் இதய நோய்களால் பாதிக்கப்படுகின்றனர். இருப்பினும், நீண்ட நேரம் உட்கார்ந்திருப்பதால் இதய நோய் வருவதற்கான ஆபத்தும் அதிகரிக்கிறது என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
நீண்ட நேரம் உட்கார்ந்திருப்பதால் நரம்புகள் வீக்கமடையும் அபாயம் உள்ளது. இது உங்கள் சருமத்தில் எரிச்சலையும் ஏற்படுத்தும்.
வேலையில் மூழ்கி தண்ணீர் குடிப்பதைக் கூட மறந்துவிடுபவர்கள் இருக்கின்றனர். இதனால் உடலில் நீரிழப்பு ஏற்படும். வேலை செய்யும்போது தண்ணீர் குடிக்க வேண்டும்.