வாழைக்காய் சமைப்பது சுலபம், ஆனால் அதை நறுக்கும்போது கைகளில் படியும் கரையைத் தவிர்ப்பது கடினம். அதற்கான சில எளிய வழிகள் குறித்து பார்ப்போம்.
life-style May 08 2026
Author: Rayar r Image Credits:chatgpt
Tamil
கைகளில் எண்ணெய் தடவவும்
வாழைக்காய் நறுக்குவதற்கு முன்பு, உங்கள் உள்ளங்கைகளிலும், கத்தியிலும் சிறிது சமையல் எண்ணெயைத் தடவிக் கொள்ளுங்கள். இது வாழைக்காய் கரை கைகளில் ஒட்டாமல் தடுக்கும்.
Image credits: stockPhoto
Tamil
உப்பு கலந்த தண்ணீர்
சிறிது உப்பு மற்றும் மஞ்சள் தூள் கலந்த தண்ணீரில் நறுக்கிய வாழைக்காய் துண்டுகளை போட வேண்டும். இதனால், வாழைக்காய் கருத்துப் போகாது, அதன் கரையும் நீங்கிவிடும்.
Image credits: stockPhoto
Tamil
எலுமிச்சை சாறு
வாழைக்காய் நறுக்குவதற்கு முன்பு கைகளில் சிறிது எலுமிச்சை சாற்றைத் தடவிக் கொள்ளுங்கள். எலுமிச்சையில் உள்ள சிட்ரிக் அமிலம், கரை கைகளில் ஒட்டாமல் பார்த்துக் கொள்ளும்.
Image credits: our own
Tamil
பால் அல்லது மோர்
வாழைக்காய் நறுக்கும்போது கைகளில் கரை ஒட்டிக் கொண்டால், சிறிது பால் அல்லது நீர்த்த மோரைக் கொண்டு கைகளைக் கழுவுங்கள். கரை உடனடியாக நீங்கிவிடும்.
Image credits: Istock photos
Tamil
பீலரை விட கத்தி சிறந்தது
எண்ணெய் தேய்த்து சோப்பு போட்டு கழுவலாம். வெதுவெதுப்பான நீரில் கைகளை வைத்திருந்தால் கரை நீங்கிவிடும். வாழைக்காய் தோலை சீவுவதற்கு பீலரை விட கத்தியைப் பயன்படுத்தினால் கரை ஒட்டாது.