மயில் வடிவம் கொண்ட இந்த மூக்குத்திகள் மணப்பெண்ணிற்கு கம்பீரமான அழகைத் தரும். இதன் நுணுக்கமான வேலைப்பாடுகளும் முத்துச் சரங்களும் வைர நகைகளுக்கு இணையான ஜொலிப்பைத் தருகின்றன.
வெள்ளியில் வண்ண எனாமல் வேலைப்பாடுகள் செய்த மூக்குத்திகள் மிகவும் பிரபலம். பூ, இலை டிசைன்களில் சிவப்பு கற்கள் பதித்த இவை, உங்கள் திருமண உடைக்கு கூடுதல் அழகைத் தரும்.
பழங்கால ராஜபுதன பாணியை விரும்புபவர்கள் ஜோதா நத் டிசைனைத் தேர்ந்தெடுக்கலாம். லேசான எடையில் பெரிய தோற்றத்தைத் தரும் 'மினிமலிஸ்டிக்' அழகை விரும்புபவர்களுக்கு ஏற்றது.
மெல்லிய வெள்ளி இழைகளால் செய்யப்பட்ட இந்த மூக்குத்திகளில் சிறிய முத்துக்கள் மற்றும் மயில் உருவங்கள் இணைக்கப்பட்டிருக்கும். இது ஒரு பிரீமியம் மற்றும் கிளாசிக் ஃபினிஷிங்கைத் தரும்.
உத்தரகண்ட் மாநிலத்தின் பாரம்பரிய பஹாரி வெள்ளி மூக்குத்திகள் இப்போது தென்னிந்தியாவிலும் பிரபலம். பெரிய கற்கள் மற்றும் மணிகள் கொண்ட இந்த தனித்துவமான டிசைன் பலரையும் கவர்ந்து வருகிறது
வெள்ளியில் முத்துக்கள் மற்றும் கற்கள் பதித்த இந்த மூக்குத்தி, மெல்லிய சரம் மூலம் கூந்தலோடு இணைந்து மணப்பெண்ணிற்கு ஓர் அரசக் கலைநயத்தையும் அழகையும் வழங்குகிறது.
வெள்ளி நகைகளில் குந்தன் கற்கள் பதிப்பது இப்போது ஃபேஷன். கருப்பு நிற ஆக்சிடலைஸ்டு மூக்குத்திகள் பழமையான அழகைத் தரும். மெரூன், பச்சை நிற திருமண உடைகளுக்கு இது கச்சிதமாக பொருந்தும்.