Tamil

'உள்ளங்கை' அரிப்புக்கு சொல்லும் காரணத்தை கொஞ்சம் பாருங்களேன்..!!

Tamil

உள்ளங்கை அரிப்பு

உள்ளங்கையில் அரிப்பு ஏற்படுவது குறிப்பிட்ட சிலவற்றின் அடையாளமாக இருக்கலாம் என்ற மூடநம்பிக்கை மக்கள் மத்தியில் பரவலாக பரவி இருக்கிறது. அது தொடர்பான பொதுவான விளக்கங்கள் இங்கே உள்ளன.

Image credits: Getty
Tamil

வலது கை அரிப்பு

வலது உள்ளங்கையில் அரிப்பு ஏற்பட்டால் பணம் அல்லது நல்ல அதிர்ஷ்டத்தை கொண்டுவர கூடியவர்களுடன் கைகுலுக்குவீர்கள். மேலும் சிலர் எதிர்பாராத செல்வத்தை பெறுவார்கள் என்பது நம்பிக்கை.

Image credits: Getty
Tamil

இடது கை அரிப்பு

இடது உள்ளங்கையில் அரிப்பு ஏற்பட்டால் நீங்கள் பணத்தை கொடுக்க  போகிறீர்கள் அல்லது நிதி இழப்பு ஏற்படும். அதுபோல் பணத்தை செலவிடப் போகிறீர்கள் என்பதற்கான அறிகுறியாகும்.

Image credits: Getty
Tamil

பணம் பெறுதல்

சில மரபுகளில், எந்த உள்ளங்கையில் அரிப்பு ஏற்பட்டாலும் நீங்கள் விரைவில் பணத்தை பெறுவீர்கள் என்பதற்கான அறிகுறியாக கருதப்படுகிறது.

Image credits: Getty
Tamil

புதியவர்கள் சந்திப்பு

மற்றொரு விளக்கம், உங்கள் உள்ளங்கையில் அரிப்பு ஏற்பட்டால் நீங்கள் விரைவில் புதியவர்களை சந்திப்பீர்கள். இது உங்கள் வாழ்க்கையில் பெரிய மாற்றங்களை கொண்டு வரும் நபராக இருக்கலாம்.

Image credits: Getty
Tamil

பயணம்

வலது உள்ளங்கையில் அரிப்பு ஏற்படால் நீங்கள் விரைவில் ஒரு பயணத்தை மேற்கொள்வீர்கள் அல்லது புதிய இடத்திற்கு செல்வீர்கள் என்று சிலர் நம்புகிறார்கள்.

Image credits: Getty
Tamil

உடல்நலம் அல்லது மருத்துவ செலவுகள்

உள்ளங்கையில் அரிப்பு ஏற்பட்டால் உடல்நலம் தொடர்பான விஷயங்களுக்கு நீங்கள் பணம் செலுத்த வேண்டும் என்பதற்கான அறிகுறியாகும்.

Image credits: Getty
Tamil

விருந்தாளிகள் வரவு

சில கலாச்சாரங்களில், உள்ளங்கையில் அரிப்பு ஏற்பட்டால் வீட்டிற்கு விருந்தாளிகள் அல்லது புதியவர்கள் வரப்போகிறார்கள் என்ற நம்பிக்கை உள்ளது.

Image credits: Getty
Tamil

ஆன்மீகம் அல்லது மூடநம்பிக்கைகள்

உள்ளங்கையின் அரிப்பு குறித்து பல விளக்கங்கள், மூடநம்பிக்கைகள் நாட்டுப்புற கதைகளில் ஆழமாக வேரூன்றியுள்ளன. இது உங்கள் கலாச்சாரம் மற்றும் நம்பிக்கை அமைப்பு பற்றியது.

Image credits: Getty

ரக்ஷா பந்தன் அன்று உங்கள் சகோதரருக்கு இந்த பரிசை கொடுங்கள்..!!

உணவு தயாரிக்கும் போது சமையல்காரர்கள் நீளமான தொப்பி அணிவது ஏன்?

தமிழ்நாட்டின் 8 புகழ்பெற்ற வரலாற்று இடங்கள்..

சுதந்திரப் போராட்ட வீரர்களின் பொன்மொழிகள்..