life-style
உடல் எடையை குறைக்க பூண்டை உங்கள் உணவில் எப்படி சேர்த்துக் கொள்வது என்று இந்த பதிவில் பார்க்கலாம்.
பூண்டில் நிறைந்துள்ள சல்ஃபர், வைட்டமின் சி, ஃபைபர் மற்றும் ஆண்டி ஆக்ஸிடெண்ட் நொயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது.
பூண்டில் நிறைந்திருக்கும் ஆலிசின் உடல் எடையை குறைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. உடல் எடையை குறைக்க பூண்டை எப்படி சாப்பிட வேண்டும்?
வெறும் வயிற்றில் பூண்டு சாப்பிடுவதால் மெட்டபாலிஸம் அதிகரிக்க உதவும். செரிமானத்தையும் மேம்படுத்துகிறது.
ஒரு கிளாஸ் வெந்நீரில் பூண்டை தட்டி சேர்த்து, சிறிது எலுமிச்சை சாறு சேர்த்து குடிக்கலாம். இது மெட்டபாலிஸம் அதிகரிக்க உதவுகிறது.
ஒரு பாத்திரத்தில் பூண்டு மற்றும் தண்ணீர் சேர்த்து சிறிது நேரம் கொதிக்கவிடவும். சில நிமிடங்களுக்கு பிறகு அதை வடிகட்டி குடித்தால் கலோரிகளை எரிக்க உதவும்
ஒரு கிளாஸ் வெந்நீரில் 2-3 பூண்டு பற்களை தட்டி சேர்த்து, சிறிது தேன் சேர்த்து குடிக்கவும். இது தொப்பை கொழுப்பை கரைக்க உதவும்.