இலவங்கப்பட்டை பால் தசை பதற்றத்தை குறைத்து உடலுக்கு அமைதியான உணர்வை கொடுக்கும். மேலும் உங்களை தூக்கத்திற்கு தயார்ப்படுத்தும்.
இலவங்கப்பட்டையில் அலர்ஜி எதிர்ப்பு பண்புகள் உள்ளதால் நாள்பட்ட வீக்கம், இதய நோய், மூட்டு வலி உள்ளிட்ட பிரச்சனைகளை குணமாக்கும்.
டைப் 2 நீரிழிவு நோயாளிகள் இலவங்கப்பட்டை பால் குடித்தால் அவர்களின் ரத்த சர்க்கரை அளவை நிர்வகிப்பதில் கூடுதல் ஆதரவு வழங்கும்.
இலவங்கப்பட்டையில் நிறைந்துள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் ஃப்ரீரேடிக்கல்களை எதிர்த்து போராடும், வயதாவதைத் தடுக்கும்.
தூங்கும் முன் இலவங்கப்பட்டை பால் குடித்தால் தூக்கத்தின் தரம் மேம்படும். இதனால் நன்றாக தூங்குவீர்கள்.
இலவங்கப்பட்டையில் ஆக்ஸிஜனேற்றிகள், அலர்ஜி எதிர்ப்புகளும், பாலில் வைட்டமின்கள், தாதுக்கள் உள்ளன. அவை உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும்.
1 கப்பாலை குறைந்த தீயில் சூடாகவும். அரை ஸ்பூன் லவங்கப்பட்டை தூள் அதில் சேர்த்து 5 நிமிடங்கள் கொதிக்க வைத்து இறக்கவும். கூடுதல் சுவைக்கு தேன் அல்லது ஒரு சிட்டிகை மஞ்சள் சேர்க்கலாம்.