life-style

சோபா குஷன்களை சுத்தம் செய்ய சிம்பிள் டிப்ஸ்

குஷன்களை ஏன் சுத்தம் செய்ய வேண்டும்?

சோபாவில் வைக்கப்பட்டுள்ள குஷன்களுக்குள் தூசி, மண் மற்றும் பாக்டீரியாக்கள் சேரும். அவற்றை அவ்வப்போது சுத்தம் செய்உஅ வேண்டும். 

குஷன் கவர்களை அகற்றவும்

முதலில் குஷன் கவர்களை அகற்றுங்கள். இந்தக் குஷன் கவர்களை கைகளால் அல்லது வாஷிங் மெஷினில் லேசாக சோப்பு சேர்த்து துவைக்கவும். 

குஷன்களைத் தட்டவும்

உங்கள் குஷன்களைத் தட்டி அல்லது மெஷின் மூலம் தூசி, மண் மற்றும் அழுக்குகளைச் சுத்தம் செய்யலாம்.

குஷன்களை வெயிலில் காய வைக்கவும்

சோபா குஷன்களை வெயிலில் காய வைப்பதால் பாக்டீரியாக்கள் மற்றும் துர்நாற்றம் நீங்கும்.

சோடியம் பைகார்பனேட்

சோடியம் பைகார்பனேட் அல்லது பேக்கிங் சோடாவை நேரடியாக குஷன்களில் தூவி சிறிது நேரம் கழித்து மெஷின் கொண்டு சுத்த, செய்யவும். 

பிளீச்சைப் பயன்படுத்தவும்

பிளீச்சை வெதுவெதுப்பான நீரில் கலந்து குஷன்களில் தெளித்து, 15 நிமிடங்கள் கழித்து ஸ்பாஞ்ச் அல்லது பிரஷ் மூலம் லேசாக தேய்த்து சுத்தம் செய்யவும்.

வினிகர் நீர் கலவை

சம அளவு வினிகர் மற்றும் நீரை கலந்து குஷன்களில் தெளித்து, சுத்தமான துணியால் துடைக்கவும். இது குஷன்களில் உள்ள கறைகள் மற்றும் அழுக்குகளை நீக்கும்.

நீராவி சுத்தம்

குஷன்கள் மிகவும் அழுக்காக இருந்தால், நீராவி சுத்தம் செய்யலாம். இது குஷன்களை ஆழமாக சுத்தம் செய்து பாக்டீரியாக்களைக் கொல்லும்.

கார்ன் ஸ்டார்ச்

குஷன்களில் அழுக்கு, வியர்வை, சிறுநீர் அல்லது எண்ணெய் கறைகள் இருந்தால், அந்த இடத்தில் கார்ன் ஸ்டார்ச் தூவி 10-15 நிமிடங்கள் கழித்து சுத்தம் செய்யவும்.

Find Next One