life-style

மங்கிப்போன கத்தியை Sharp -ஆக்க 'இத' ட்ரை பண்ணுங்க..!!

Image credits: freepik

கத்தியின் கூர்மை குறைந்து விட்டதா?

அடிக்கடி பயன்படுத்தும் போது கத்தியின் கூர்மை குறைந்து, காய்கறிகளை வெட்ட சிரமமாகிறது. கத்தியை கூர்மைப்படுத்துவதற்கான வழிகளை இங்கே பார்க்கலாம்.

Image credits: Pinterest

பீங்கான் கப்

உங்கள் வீட்டிலும் டீ குடிக்க பீங்கான் கப் இருக்கும். இந்த கப்பை தலைகீழாக வைத்து, அதன் மேல் கத்தியைத் தேய்க்கவும், இதனால் அதன் கூர்மை அதிகரிக்கும்.

பாத்திரம் கழுவும் ஸ்க்ரப்பர்

பாத்திரங்களை சுத்தம் செய்ய ஸ்க்ரப்பர் நீங்கள் நிச்சயமாகப் பயன்படுத்துவீர்கள்? இதைக் கொண்டு கத்தியை தேய்த்தால் அதன் கூர்மை அதிகரிக்கும்.

அம்மி கல்

உங்களிடம் அம்மி கல் இருந்தால், அதை கத்தியின் கூர்மையை அதிகரிக்கப் பயன்படுத்தலாம். அதன் மேல் 1 நிமிடம் கத்தியை வேகமாக தேய்த்தால் அது கூர்மையாகும்.

கார்ட்போர்டைப் பயன்படுத்துங்கள்

கார்ட்போர்டைப் பயன்படுத்தியும் கத்தியை கூர்மைப்படுத்தலாம். கார்ட்போர்டு துண்டில் கத்தியை மெதுவாக தேய்த்தால், அது கூர்மையாகும்.

லெதர் பெல்ட்

உங்களிடம் பழைய லெதர் பெல்ட் இருந்தால், அவற்றின் உதவியுடன் கத்தியை கூர்மையாக்கலாம். இதற்கு லெதர் பில்டில் கத்தியின் முனையை நன்றாக தேய்த்தால் கத்தி கூர்மையாகும்.

நைலான் பட்டை

பள்ளிப் பை அல்லது லேப்டாப் பையில் நைலான் பட்டை இருக்கும். இந்த பட்டையின் மேல் கத்தியை ஓட விடுங்கள். அவ்வாறு செய்வதன் மூலம் அதன் கூர்மை அதிகரிக்கும்.

Find Next One