பயன்படுத்திய டீ பேக்குகளை தோட்டத்தில் அடிப்படையாக பயன்படுத்தலாம்.
தோட்டத்தில் உள்ள பூச்சிகளின் தொல்லையை குறைக்க டீ பேக்குகளை பயன்படுத்தலாம்.
எளிதில் நெருப்பு மூட்டவும் டீ பேக்குகள் உதவியாக இருக்கும். டீ பேக்கை முழுவதுமாக உலர்த்திய பின் பயன்படுத்தலாம்.
வீட்டிற்குள் தங்கி நிற்கும் துர்நாற்றத்தை போக்கவும் டீ பேக் உதவும். ஈரப்பதமில்லாமல் உலர்த்திய பின் துர்நாற்றம் உள்ள இடத்தில் வைக்கலாம்.
நாற்றுகள் முளைக்கவும் டீ பேக் பயனுள்ளதாக இருக்கும். டீ பேக்கை நனைத்து அதில் விதைகளை வைத்தால் போதும்.
டீ பேக்கை நனைத்து கண்ணாடி போன்றவற்றை மெதுவாக தேய்க்கலாம். பின் மைக்ரோஃபைபர் துணியால் துடைத்தால் போதும்.
பாத்திரத்தில் உள்ள எண்ணெய் பிசுக்கை நீக்கவும் டீ பேக்குகள் உதவும். சிறிது சூடான நீரில் டீ பேக்கை போட்ட பின் பாத்திரங்களை அதில் ஊற வைக்கலாம்.
விட்டமின் டி குறைபாட்டின் அறிகுறிகள்
பிரஷர் குக்கரில் சமைக்க கூடாத 7 உணவுகள்
உலகின் பணக்கார நாடு இதுதான்! தனி நபர் வருமானம் ரூ.1.35 கோடி!
சாக்ஸ் போடாமல் ஷூ அணிந்தால் இத்தனை பிரச்சனைகள் வருமா?