எல்லா இடங்களிலும் பேசுவது புத்திசாலித்தனம் அல்ல என்று சாணக்கியர் கூறுகிறார். சில சமயங்களில் மௌனமே மிகப்பெரிய ஆயுதம்.
சாணக்கிய நீதிபடி, அமைதியாக இருப்பது உங்களுக்கு வெற்றியையும், மரியாதையும் தரும். இந்த 7 சந்தர்ப்பங்களை அறிந்து கொள்ளுங்கள்.
யாராவது கோபத்தில் ஏதாவது தவறாக பேசினால் நீங்களும் கோபப்படாமல் அமைதியாக இருங்கள். இது உங்கள் ஞானத்தை காட்டுகிறது. மற்றவர் தனது தவறை உணர வைக்கிறது.
மற்றவர்கள் உங்களை புரிந்து கொள்ள தயாராக இல்லாத போது அமைதியாக இருங்கள். அதுதான் நல்லது என்று சாணக்கியர் சொல்லுகிறார்.
உங்களை பாராட்டும் போது அமைதியாக இருப்பது பணிவின் அடையாளம். உங்களை அதிகமாக புகழ்ந்து பேசுவது ஆவணமாக மாறும்.
யாராவது தவறு செய்யும் போது நீங்கள் அதை கவனிக்கும் போது, தனிப்பட்ட முறையில் அவருக்கு விளக்குங்கள் அல்லது அமைதியாக இருப்பதன் மூலம் ஒருவரின் கௌரவத்தை காப்பாற்ற முடியும்.
உங்கள் வார்த்தைகள் சூழலை கெடுக்கும் என்றால் அந்த சமயத்தில் அமைதியாக இருப்பது தான் நல்லது.
நீங்கள் கற்றுக் கொள்ளும்போது அமைதியாக இருந்து விஷயங்களை கற்றுக் கொள்ளுங்கள்.
நீங்கள் பேசுவது ஒருவரை காயப்படுத்தினால் அமைதியாக இருங்கள்.
காலத்திற்கு ஏற்ப அமைதியாக இருக்க தெரிந்தவர் மரியாதை மற்றும் வெற்றி இரண்டையும் பெற தகுதியானவர் என்று சாணக்கியர் கூறுகிறார்.