வைட்டமின் சி, வைட்டமின் ஏ, இரும்புச்சத்து, துத்தநாகம், பொட்டாசியம், நார்ச்சத்து, மெக்னீசியம் மற்றும் பேப்பரில் ஆகியவை உள்ளன.
நிபுணர்களின் கூற்றுப்படி, கருப்பு மிளகு டீ குடிப்பது ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் நன்மை பயக்கும். மேலும் பல பிரச்சினைகளில் இருந்து நிவாரணம் அளிக்கும்.
கருப்பு மிளகு டீ செரிமான அமைப்பை ஆரோக்கியமாக வைக்க பெரிதும் உதவுகின்றது. இது தவிர வயிறு தொடர்பான பிரச்சனைகளையும் குறைக்கும்.
வயிற்றில் இருக்கும் தேவையற்ற கொழுப்பை குறைக்க நீங்கள் விரும்பினால் கருப்பு மிளகு டீ குடியுங்கள்.
கருப்பு மிளகு டீயில் இருக்கும் பண்புகள் உடலில் வளர்ச்சிதை மாற்றத்தை அதிகரிக்க பெரிதும் உதவும். இதனால் எடையை சுலபமாக கட்டுப்படுத்தி விடலாம்.
கருப்பு மிளகு டீயில் இருக்கும் பண்புகள் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்த பெரிதும் உதவுகிறது.
ஒரு பாத்திரத்தில் 1 கப் தண்ணீர், சிறிதளவு இஞ்சி தூவி பிறகு அரை ஸ்பூன் கருப்பு மிளகு சேர்த்து நன்கு கொதிக்க வைத்து வடிகட்டி குடிக்கவும். சுவைக்குத் தேன் எலுமிச்சை சாறு சேர்க்கலாம்.