போகி பண்டிகையின் பொழுது கண்டிப்பாக பிரம்ம முகூர்த்தத்தில் எழுவது நல்ல பலன்களைக் கொடுக்கும். எழுந்ததும் வீட்டில் இருக்கும் தேவையில்லாத பொருட்களை போட்டு எரித்து விட வேண்டும்.
Image credits: our own
கிழிந்த துணிமணிகள்
பழைய கிழிந்த துணிகளில் தீயில் எரிக்கும் போது நம்மிடம் உள்ள கெட்ட சக்திகள் அழியும் என்று கூறப்படுகிறது.
Image credits: our own
துடைப்பம்
வீட்டில் உள்ள பழைய துடைப்பங்களை போகியில் எரிக்கலாம். ஆனால் வீட்டில் புதிய துடைப்பத்தை வாங்கி வைத்துவிட்டு தான் பழைய துடைப்பத்தை எரிக்க வேண்டும்.
Image credits: our own
கால் மிதியடி
கால்களை சுத்தம் செய்ய துடைப்பதற்கு கால் மிதியை பயன்படுத்துவது வழக்கம். கிழிந்த நிலையில் அல்லது அசுத்தமான நிலையில் இருக்கும் இந்த மிதியடிகளை போகியில் போட்டு எரிப்பது நல்லது.