life-style

World Photography Day: இந்தியாவில் புகைப்படம் எடுக்க சிறந்த இடங்கள்!!

ஜெய்ப்பூர், ராஜஸ்தான்

இளஞ்சிவப்பு நகரமான ஜெய்ப்பூர் அரண்மனைகள், கோட்டைகள், சந்தைகளுக்கு பிரபலமானது.  இங்குள்ள ஆம்பர் கோட்டை, ஹவா மஹால், சிட்டி பேலஸ் போன்ற இடங்களில் புகைப்படம் எடுக்கலாம்.

வாரணாசி, உத்தரப் பிரதேசம்

ஆன்மீக முக்கியத்துவத்திற்கு மட்டுமல்ல, கங்கை ஆரத்தியின் போது அஸ்ஸி காட் அல்லது வாரணாசியின் சூரிய அஸ்தமனம், சூரிய உதயத்தின் போது அற்புதமான புகைப்படங்களை  எடுக்கலாம்.

உதய்பூர், ராஜஸ்தான்

ஏரிகளின் நகரமான உதய்பூர் காதல் புகைப்படங்களுக்கு ஏற்ற இடமாகும். இங்குள்ள பிச்சோலா ஏரி, சிட்டி பேலஸ் மற்றும் சஹேலியன் கி பரி ஆகிய இடங்களில் புகைப்படங்களை எடுக்கலாம்.

மூணாறு, கேரளா

மூணாறு பசுமையான தேயிலைத் தோட்டங்கள், அசைந்தாடும் மரங்கள், மூடுபனி நிறைந்த மலைகளுக்கு பிரபலமானது. இங்கு சொர்க்கம் போன்ற அழகான புகைப்படங்களை எடுக்கலாம்.

லே-லடாக், ஜம்மு காஷ்மீர்

புகைப்படக் கலைஞர்களுக்கு லே லடாக் ஏற்ற இடமாகும். இங்குள்ள பங்காங் ஏரி, நுப்ரா பள்ளத்தாக்கு மற்றும் திக்ஸே மடம் ஆகியவை சரியான இடங்கள்.

ஹம்பி, கர்நாடகா

ஹம்பி பண்டைய சிற்பங்கள், தனித்துவமான பாறைகள் மற்றும் வரலாற்று கோவில்களுக்கு பிரபலமானது. இங்குள்ள விட்டலா கோயில், ஹேமகுடா மலை, மாதங்க மலை ஆகியவை புகைப்படம் எடுப்பதற்கு ஏற்ற இடங்கள்.

ஜெய்சால்மர், ராஜஸ்தான்

தங்க நகரமான ஜெய்சால்மரில் மணல்கல் கட்டிடக்கலை மற்றும் அழகான கோட்டைகளைக் காணலாம். ஜெய்சால்மர் கோட்டை, சாம் மணல் திட்டுகள், கடிசர் ஏரி ஆகிய இடங்களில் புகைப்படம் எடுக்கலாம்.

அந்தமான் நிக்கோபார்

அந்தமான் நிக்கோபார் தீவுக்குச் செல்லலாம். தெளிவான நீர் மற்றும் அமைதியான சூழல் புகைப்படம் எடுப்பதற்கு ஏற்றது.

Infosys சுதா மூர்த்தி புடவை டிசைன்கள்!!

வானத்திலிருந்து உண்மையில் பாம்புகள் விழுகின்றனவா?

எந்த காலத்திலும் AIயால் மேற்கொள்ளமுடியாத 7 முக்கிய வேலைகள்!

ரக்ஷா பந்தன்.. குடும்பத்தோடு சூப்பரா சுவைக்க 7 இந்திய சிற்றுண்டிகள்!