life-style
சில நாய் இனங்கள் அதிகமாக சாப்பிடும் வழக்கம் கொண்டவை.
டச்ஷண்ட் நாய்கள் உணவு மீது அதிக பிரியம் கொண்டவை. அவை உட்கொள்ளும் உணவைக் கண்காணிக்கவில்லை என்றால் அதிகமாக சாப்பிட்டுவிடும்.
கோல்டன் ரெட்ரீவர்களின் பசியும் ரொம்ப அதிகம். வழக்கமாக அவை சாப்பிடும் உணவின் அளவைக் காணிக்க வேண்டும். இல்லாவிட்டால் நிறைய சாப்பிட்டுவிடும்.
நியூ ஃபவுண்ட்லேண்ட் இன நாய்கள் மிகவும் சுறுசுறுப்பானவை. ஆனால் அதற்கு ஏற்ப பசியும் ஜாஸ்தியாக இருக்கும்.
செயிண்ட் பெர்னார்ட் நாய்கள் பெரிதாக வளரக்கூடியவை என்பதால், இயற்கையாகவே அவற்றிற்கு அதிக உணவு தேவைப்படும்.
லாப்ரடோர் ரெட்ரீவர் நாய்கள் உணவை மிகவும் விரும்பிச் சாப்பிடக்கூடியவை. அதே சமயம் எப்போதும் உற்சாகமாகவும் இருக்கும்.
பீகிள் இன நாய்கள் வலுவான மோப்ப சக்தி கொண்டவை. இவை மற்ற நாய்களைவிட அதிகமாக சாப்பிடுவதற்கும் அது ஒரு காரணமாகச் சொல்லப்படுகிறது.
பாசெட் ஹவுண்ட் நாய்கள் அதிகமாக சாப்பிடுபவை. இந்த நாயை வளர்ப்பவர்கள் அவற்றின் உணவுக் கட்டுப்பாட்டில் கவனம் செலுத்துவது முக்கியம்.