கோடை காலத்தில் சருமத்தைப் பாதுகாக்க நீங்கள் தவிர்க்க வேண்டிய 7 தவறுகள்
life-style Apr 29 2026
Author: Priya Velan Image Credits:Getty
Tamil
சன்ஸ்கிரீன் பயன்படுத்தத் தவறுவது:
வெளியே செல்லும் போது மட்டுமல்ல, வீட்டிற்குள் இருக்கும் போதும் சூரியனின் புற ஊதாக் கதிர்கள் சருமத்தைப் பாதிக்கும். எனவே, தரமான சன்ஸ்கிரீன் பயன்படுத்துவதை ஒருபோதும் தவிர்க்காதீர்கள்.
Image credits: Getty
Tamil
அடிக்கடி முகத்தைக் கழுவுவது:
வியர்வையாக இருக்கிறது என்பதற்காக ஒரு நாளைக்கு பலமுறை ஃபேஸ் வாஷ் கொண்டு முகத்தைக் கழுவக்கூடாது. இது சருமத்தில் உள்ள இயற்கை எண்ணெய்ப் பசையை நீக்கி, சருமத்தை வறட்சியாக்கிவிடும்.
Image credits: Getty
Tamil
மாய்ஸ்சுரைசரைத் தவிர்ப்பது:
கோடையில் சருமம் ஏற்கனவே எண்ணெய் பிசுபிசுப்புடன் இருப்பதாக நினைத்து பலர் மாய்ஸ்சுரைசர் பயன்படுத்துவதில்லை. ஆனால் சருமத்தின் ஈரப்பதத்தைத் தக்கவைக்க லேசானமாய்ஸ்சுரைசர் மிகவும் அவசியம்
Image credits: Getty
Tamil
அதிகப்படியான ஸ்க்ரப்பிங் (Over-Exfoliation):
முகத்தில் உள்ள இறந்த செல்களை நீக்க ஸ்க்ரப் செய்வது நல்லது தான். ஆனால் கோடையில் அடிக்கடி ஸ்க்ரப் செய்வது சருமத்தில் எரிச்சலையும் சிவந்த தழும்புகளையும் உண்டாக்கும்.
Image credits: Getty
Tamil
தண்ணீர் குடிக்காமல் இருப்பது:
சருமப் பொலிவு என்பது வெளிப்பூச்சு மட்டுமல்ல; உட்புற ஆரோக்கியமும் அவசியம். தினமும் 3 லிட்டர் தண்ணீர் குடிப்பது சருமத்தை ஈரப்பதமாகவும், இயற்கையாகவே பளபளப்பாகவும் வைத்திருக்க உதவும்.
Image credits: Getty
Tamil
கனமான மேக்கப் போடுவது:
வெயில் காலத்தில் அதிகப்படியான மேக்கப் தயாரிப்புகளைப் பயன்படுத்துவது சருமத் துளைகளை அடைத்து, முகப்பருக்கள் வரக் காரணமாகும். முடிந்தவரை 'சிம்பிள்' மேக்கப் முறையைப் பின்பற்றுங்கள்.
Image credits: Getty
Tamil
கண்கள் மற்றும் உதடுகள் பராமரிப்பு:
முகத்தைப் பராமரிக்கும் போது கண்கள், உதடுகளை மறக்கக்கூடாது. கருவளையத்தைத் தவிர்க்க ஐ-கிரீம் மற்றும் உதடுகளைப் பாதுகாக்க SPF கொண்ட லிப் பாம் பயன்படுத்துவது அவசியம்.