புராணங்களில் கூறியுள்ளபடி, யானைகள், ஞானம், பாதுகாப்பு மற்றும் நல்ல அதிர்ஷ்டத்தை குறிக்கிறது. குறிப்பாக அவற்றின் தும்பிக்கைகள் உயர்த்தும் தருணம்.
Image credits: Freepik
பூனை
பல்வேறு கலாச்சாரங்களில், குறிப்பாக ஜப்பானில், பூனைகள் அதிர்ஷ்டசாலிகள் என்று கருதப்படுகின்றன. "மனேகி-நேகோ" (சைகை செய்யும் பூனை) செழிப்பை ஈர்க்கிறது என்று கருதப்படுகிறது.
Image credits: Pixabay
லேடி பக்
இந்த வண்ணமயமான பூச்சி நல்ல அதிர்ஷ்டத்தைக் கொண்டுவருவதாக நம்பப்படுகிறது. இந்த பூச்சியை பார்க்கும் போது உங்கள் விருப்பத்தை நினைத்து கொண்டால் அது கண்டிப்பாக நடக்கும் என்பது நம்பிக்கை.
Image credits: Freepik
குதிரை
குதிரைகள் வலிமை மற்றும் சுதந்திரத்தின் அடையாளங்கள். சில கலாச்சாரங்களில், குதிரை சிலை வைத்திருப்பது நல்ல அதிர்ஷ்டத்தை ஈர்க்கும் என்று கருதப்படுகிறது.
Image credits: Facebook
தவளை
சிலரது மரபுகளின் நம்பிக்கை படி தவளைகள் செழிப்பு மற்றும் கரு உருவாவதின் அடையாளமாக பார்க்க படுகிறது.
Image credits: Getty
ஆமை
நீண்ட ஆயுள் மற்றும் நிலைத்தன்மையின் அடையாளமாகக் கருதப்படும் ஆமைகள், நல்ல அதிர்ஷ்டத்தையும் பாதுகாப்பையும் தருவதாக கருதப்படுகிறது.
Image credits: Freepik
தங்கமீன்
ஃபெங் சுய்யில், தங்கமீன்கள் செல்வத்தையும் மிகுதியையும் குறிக்கின்றன. வீடுகளில் வைத்திருக்கும் போது அவை செழிப்பைக் கொண்டுவருவதாக நம்பப்படுகிறது.