வெயில் கால பார்ட்டிகளில் பிளாக் டிரஸ் அல்லது எத்னிக் உடைகளுடன் பிரைட் ரெட் லிப்ஸ்டிக் போட்டால் சூப்பராக இருக்கும். நீங்கள் கிரீமி மேட் ஃபினிஷ் கொண்ட லிப்ஸ்டிக்கை தேர்ந்தெடுக்கலாம்.
வெயில் காலத்திற்கு பிரகாசமான, டிரெண்டியான ஒரு ஷேடைத் தேடுகிறீர்கள் என்றால், ஃபியூஷியா பிங்க் லிப்ஸ்டிக்கை தேர்வு செய்ய மேட் ஃபினிஷ் லுக், ஒரு ஃபிரெஷ்ஷான தோற்றத்தைக் கொடுக்கும்.
பிரைட் நிறங்களில், ஷிம்மரி பிரவுன் நிறம் பார்ட்டி லுக்கை மேலும் மெருகேற்றும். பிரகாசமான முகத்திற்கு பிரவுன் ஷேடு எடுப்பாகவும், காலத்தால் அழியாத கிளாசிக் லுக்கையும் கொடுக்கும்.
ஆரஞ்சு மற்றும் பிங்க் நிறத்தின் கலவைதான் கோரல் லிப்ஸ்டிக் ஷேடு. வெயில் காலத்தில் பிரகாசமான சருமம் உள்ளவர்களுக்கு இது மிகவும் பொருத்தமான ஷேடாகக் கருதப்படுகிறது.
ஆரஞ்சு, சிவப்பு கலந்த ஷேடு மிகவும் பிரகாசமாக இருக்கும். குறைவான மேக்கப் போடும்போது முகத்திற்கு நல்ல எடுப்பைக் கொடுக்கும். பார்ட்டிகளுக்கு பகல் நேரத்திலும் அழகாக இருக்கும்.
பிரைட் லிப்ஸ்டிக் பிரகாசமான, அடர்த்தியான நிறம் கலந்த பெர்ரி அல்லது பிளம் ஷேடை தேர்ந்தெடுக்கலாம். மாலை நேர நிகழ்ச்சிகள் அல்லது பார்ட்டிகளுக்கு இது ஒரு சிறந்த தேர்வாக இருக்கும்.