சாப்பிட்டதும் சோம்பு சாப்பிடுங்க... காரணம் இதுதான்!
சாப்பிட்ட பிறகு தினமும் கொஞ்சம் சோம்பு மென்று சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி இங்கே தெரிந்துகொள்ளலாம்.
health Apr 07 2026
Author: Raghupati R Image Credits:Social Media
Tamil
ஊட்டச்சத்துக்கள் நிறைந்த சோம்பு
சோம்பு, ஊட்டச்சத்துக்கள் நிறைந்த மசாலாப் பொருட்களில் ஒன்று. சாப்பிட்ட பிறகு சிறிதளவு சோம்பு சாப்பிட்டால், பல ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கும்.
Image credits: social media
Tamil
மாதவிடாய் வலியை குறைக்கும்
மாதவிடாய் காலங்களில் ஏற்படும் வயிற்று வலி மற்றும் தசைப்பிடிப்பைக் குறைக்க சோம்பு உதவுகிறது.
Image credits: Social media
Tamil
ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும்
ரத்த அழுத்தத்தை சீராக வைத்திருக்க சோம்பை மென்று சாப்பிடலாம். சோம்பில் பொட்டாசியம் அதிகமாக இருப்பதால், இது இதயத் துடிப்பு மற்றும் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த உதவுகிறது.
Image credits: Social Media
Tamil
செரிமான கோளாறுகளை சரிசெய்யும்
உங்களுக்கு அஜீரணம், மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகள் இருந்தால், சோம்பை மென்று சாப்பிடுங்கள். இது வயிற்று வலியைப் போக்க உதவும்.
Image credits: Social Media
Tamil
ஆஸ்துமா, சளியை குறைக்கும்
ஆஸ்துமா மற்றும் சளித் தொல்லையால் அவதிப்படுபவர்கள் சோம்பு சாப்பிடுவதன் மூலம் ஆஸ்துமா, சைனஸ் மற்றும் சளிப் பிரச்சனைகளைக் கட்டுப்படுத்தலாம்.
Image credits: pexels
Tamil
வாய் துர்நாற்றத்தை போக்கும்
சோம்பு மென்று சாப்பிடுவது ஒரு இயற்கையான மவுத் ஃப்ரெஷ்னராக செயல்படுகிறது. இது வாய் துர்நாற்றத்தைப் போக்குவதோடு, உமிழ்நீர் உற்பத்தியையும் தூண்டுகிறது.
Image credits: Getty
Tamil
குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்
சோம்பில் ஆன்டிஸ்பாஸ்மோடிக் பண்புகள் உள்ளன. இது வயிற்று வலி மற்றும் குடல் அசௌகரியங்களைக் குறைக்க உதவும்.