கட்டுப்பாடற்ற உயர் ரத்த அழுத்தம், மூளையில் உள்ள ரத்தக் குழாய்களை சேதப்படுத்தும். இது பக்கவாதம் மற்றும் மாரடைப்புக்கு வழிவகுக்கும்.
ஒரு நாளைக்கு குறைந்தது 7 மணி நேரமாவது ஆழ்ந்த உறக்கம் அவசியம். தூக்கமின்மை, ஞாபக சக்தியைக் குறைத்து, மன ஆரோக்கியத்தையும் மோசமாக்கும்.
அதிக மன அழுத்தம் ஏற்படும்போது, கார்டிசோல் ஹார்மோன் அதிகமாகச் சுரக்கும். இது கவனச் சிதறலை ஏற்படுத்தி, ஞாபக சக்தியைக் குறைக்கும்.
தொடர்ந்து ஒரே இடத்தில் உட்கார்ந்திருப்பது மூளைக்கான ரத்த ஓட்டத்தைக் குறைக்கும். இது உடல் பருமன், நீரிழிவு, இதய நோய் போன்றவற்றுக்கு வழிவகுக்கும்.
அதிக உப்பு, சர்க்கரை மற்றும் ஆரோக்கியமற்ற கொழுப்புகள் நிறைந்த பதப்படுத்தப்பட்ட உணவுகளைச் சாப்பிடுவது, உங்கள் மூளையை மோசமாகப் பாதிக்கும்.
தொடர்ந்து மது அருந்துவதும், புகைப்பிடிப்பதும் மூளையின் ஆரோக்கியத்தை மிக மோசமாகப் பாதிக்கும்.
மொபைல், லேப்டாப் போன்றவற்றை அதிக நேரம் பயன்படுத்துவது மூளையின் ஆரோக்கியத்தைப் பாதிக்கும். இது மனச் சோர்வை ஏற்படுத்தும்.
எப்போதும் தனிமையில் இருப்பது உணர்வுரீதியான பிரச்னைகளை மட்டுமல்ல, மூளையின் ஆரோக்கியத்தையும் பாதிக்கும். இது மனச்சோர்வு போன்ற நோய்களுக்கு வழிவகுக்கும்.
Ginger Water: வெறும் வயிற்றில் இஞ்சி சாறு குடிப்பதால் கிடைக்கும் 7 நன்மைகள்!
Teeth Health: பற்களை ஆரோக்கியமாக வைத்திருக்க இந்த உணவுகளை சாப்பிடுங்க!
Curry Leaves: தினமும் கறிவேப்பிலை சாப்பிடுங்க... இந்த 6 நன்மைகளை மிஸ் பண்ணாதீங்க!
Rosemary Oil: முடி வளர ரோஸ்மேரி எண்ணெய் பயன்படுத்துறீங்களா? இதை படிங்க!